தேச பக்தரும் ; தேச துரோகியும்

தேச பக்தரும் ; தேச துரோகியும்

ஜூலை 30 பாரதத்தில் நிகழ்ந்த – உலக மக்களின் மனத்தில் தாக்கத்தை அழுத்தமாக பதித்த வெவ்வேறு நிலைப்பாட்டின் இரு நிகழ்ச்சிகள் ஒரே வருடத்தின் ஒரு நாளில் அரங்கேறியது.

மக்கள் நாயகனாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு. அப்துல்கலாம் அவர்களின் இறுதிச் சடங்குகளும், பயங்கரவாதத்தின் அடையாளமான யாகூப்மேமன் தூக்கில் தொங்கியதும்.

உயர்திரு. அப்துல்கலாம் அவர்களுக்கு நாடே திரண்டு நின்று அஞ்சலி செலுத்தியது. நாட்டின் தென்கோடியில் பிறந்த அந்த மாமனிதனுக்கு எட்டு திசைகளிலிருந்தும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தனது வீட்டில் ஒருவர் தவறிவிட்டால் எத்தகைய மன உணர்வு இருக்குமோ அந்த ஆழ்மனத்தின் வெளிப்பாடாக, உண்மையான வருத்ததோடு, கனத்த இதயத்தோடு மக்களைக் காண முடிந்தது. தெருவெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது அயராத முயற்சியினால், பயிற்சியினால் கல்வியில் உயர்ந்து , நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நாட்டுக்காகவே தன்னை அர்பணித்துக்கொண்டார். எண்ணம், சொல், செயல் திறமைகள் அனைத்தையும் நாட்டின் மேன்மைக்காகவே  வழங்கினார். உண்மை, நேர்மை, தூய்மை இவற்றின் உருவமாக திகழ்ந்தார்.

நாட்டின் முதற்குடிமகனாக இருந்தும் படாடோபம் இல்லாமல், கர்வம் கொள்ளாமல் மிக இயல்பான, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். ஓய்வு பெற்ற பிறகும் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்குவிக்கும் தேச நிர்மானப் பணிகளில் ஈடுபட்டார். இறுதிக் காலம்வரை தேனியைப் போல சுறுசுறுப்பாக இருந்தவர்.

இந்த நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை உயர்வாக போற்றியவர். இஸ்லாமியராக இருந்தும் பிற மத நிகழ்சிகளில் பங்கெடுத்துக்கொண்டு சிறப்பித்தவர்.

இத்தகைய உயர் பண்புகளால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். தேசமே தெய்வம் என வாழ்ந்ததனால் பார்போற்றும் தலைவரானார்.

 

தேசத்தை சிதைத்து பிரபலமடைந்தவன் யாகூப் மேமன். 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்திட முக்கிய காரணமானவன்.

அரசு கணக்கின் படி 257 பேர் பலியான, ஆயிரக்கணக்கானோர் அங்கஹீனமடைந்த கோர சம்பவத்தின் சூத்திரதாரி இப்ராகிம் தாவூத், அண்ணன் டைகர் மேமன் ஆகியோருடன் இணைந்து சதித்திட்டங்கள் தீட்டியவன்.

மும்பை நகரம் வரலாறு காணாத பேரிடரைக் கண்டதால் பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்படைந்தது. இந்த தேசம் முன்னேறக்கூடாது, குறிப்பாக நாட்டின் வர்த்தக நகராக திகழக்கூடிய மும்பையை அதலபாதாளத்திற்கு தள்ளவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட பயங்கரவாத செயல்.

பலகட்ட விசாரணைகளில் யாகூபுக்கு தொடர்பிருந்தது ஊர்ஜிதப் படுத்தப்பட்டது. கடந்த 2007–ம்ஆண்டு விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 2013–ம் ஆண்டு உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவனது  கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். அதைத்தொடர்ந்து யாகூப்மேமன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி ஆனது.

இந்த நிலையில் அவரை 30–ந்தேதி தூக்கில் போட உத்தரவிடப்பட்டு இருந்தது. கடைசியாக தாக்கல் செய்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் 30 ம் தேதி காலை தூக்கிலிடப்பட்டான்.

பல இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், இவர்களுடன் பல ஊடங்கங்களும் யாகூப்மேமன் இறப்பை ஒரு தேசத் தியாகியினுடைய இறப்பாக கொண்டு துக்கம் அனுசரித்தனர்.

இந்த மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமே காவி தீவிரவாதம் தான்  என அனல் பறக்கும் விவாதங்கள், விமர்சனங்களால் நாடே சூடாகிப்போனது. அப்துல் கலாம் இறப்பைகூட பெரிதாக எண்ணாத அளவுக்கு நாட்டில் யாகூப்மேமன் தூக்கிலடப்பட்டது பெரிதாகப் பேசப்பட்டது.

ஆனால் மக்கள் மிகத் தெளிவாக இருந்தனர். தேச பக்தரையும், தேச துரோகியையும் மிகச் சரியாக கணக்கீடு செய்திருந்தனர்.

எந்த நிர்பந்தமும் இல்லாது தாங்களாகவே முன்வந்து திரு.கலாம் அவர்களுடைய இறுதி நிகழ்சிகளில் கலந்து கொண்டனர். வந்தேமாதரம், பாரத்மாதா கீ ஜெய் எனும் கோஷங்கள் விண்ணை எட்டின.

மேமனுடைய நிகழ்விலோ குல்லா போட்ட தலைகள் மட்டுமே காணப்பட்டன. அல்லாஹுஅக்பர் எனும் கோஷமே போடப்பட்டது. இந்த தேசத்தில் சிறுபான்மையான முஸ்லீம்கள் என்றும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ற வகையிலே அந்த இறுதி ஊர்வலம் இருந்தது.

இறுதியாக இந்த தேசத்திலுள்ள முஸ்லீம்களின் நிலைப்பாடு பற்றி மக்கள் மனத்தில் பெருத்த சந்தேகத்தை இவ்விரு மரணமும் ஏற்படுத்தியுள்ளது.

மாமனிதர் அப்துல் கலாம் அவர்களது இறுதி நிகழ்ச்சிக்கு பெருவாரியான முஸ்லீம்கள் வரவேயில்லை. அவர் அசைவம் சாப்பிட்டதில்லை, திருமணம் செய்துகொண்டு குழந்தைபெறவில்லை, இந்து சந்நியாசிகளின் காலில் விழுகிறார், கோவில்களுக்கு செல்கிறார் எனவே அவர் போற்றத் தகுந்த முஸ்லீம் இல்லை, உண்மையான முஸ்லீமே கிடையாது என பல இடங்களில் பதிவு செய்தனர்.

மாறாக யாகூப்மேமனுக்கு இறப்பிற்கு பிறகு செய்யப்படும் சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. அவரது ஊர்வலத்தில் முஸ்லீம்கள் மட்டுமே பங்கு கொண்டனர். இந்த தேசத்தில் வாழவே பிடிக்கவில்லை என்பது போலெல்லாம் பதிவுகள் சமூக வலைத்தளங்களிலே உலவின..

ஆகா இவையெல்லாம் உணர்த்துவது ஒன்றைத்தான் – முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய மாட்டார்கள். இந்த தேசத்தினை, பண்பாடு,கலாசாரத்தினை தங்களுடையதாக என்ன மாட்டார்கள். அவ்வாறு செயபடுபவர்களை காபிர்கள் என்றும் முஸ்லீம்களே அல்ல என்றும் கூறுவார்கள்.

அவர்களுக்கு தேசம் என்பது முக்கியமல்ல அவர்களது மதமே (பயங்கரவாதமே) முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *