செல்வீர்;சொல்வீர் – மாநில மாநாடு

இந்து முன்னணி 1980 ல் துவக்கட்டது. கன்னியாகுமரியில் முதல் மாநாடானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

வருகிற ஜூன் 7 ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற இருக்கின்ற ஐயா தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

2016 இல் தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிறது. அதற்க்கு இப்போதே இந்துக்கல்லின் வலிமையை உணர்த்தவும்,நமது நியாயமான கோரிக்கைகளை ஏற்க்க வைக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்து சமுதாயம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளது.சாதிவாரியாக பிரித்து ஓட்டுப் பெரும் நரித்தந்திர  அரசியல்வாதிகளிடமிருந்து விழிப்போடு நமது பிரதிநிதித்துவத்தை பெற இந்துக்கள் வலிமையை,ஒற்றுமை உணர்வை எடுத்துக்காட்டும் வகையில் கோவை மாநாடு மாபெரும் நிகழ்வாக அமைய வேண்டும். அதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும்.

வெற்றி மாநாடாக அது மாறும்போது இந்துக்களின் ஒற்றுமை, விழிப்புணர்வு வெளிப்படும்.

அரசியல் கட்சிகள் இந்துக்களின் கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்த முன்வருவார்கள்.

தமிழகம் ஆண்மீகபூமி!.,  நாயன்மார்களும்,ஆழ்வார்களும் கட்டிக்காத்த இந்து உணர்வை தட்டி எழுப்பிட வேண்டும்.

இந்துக்கள் அரசியல்வாதிகளின் அடிமை என்ற எண்ணத்தை முறியடிப்போம்.

முதலில் நான் ஒரு இந்து! அதன்பிறகே இன்ன ஜாதி., இந்த மொழி என்பதெல்லாம்…என்று உரக்க கூறுவோம்.கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்து சமுதாயத்தை கேவலப்படுத்தும் நூல்களை எழுதும் எழுத்தாளர்களுக்கும், அதனை ஆதரிப்போருக்கும் சாவு மணியாக இந்த கோவை மாநாடு விளங்க வேண்டும்.

கோவை குலுங்குவது தமிழகம் முழுதும் எதிரொலிக்க வேண்டும்….

ஒவ்வொரு வார்டுகளிலும் , கிராமங்களிலும் இந்துமுன்னணி கிளைக்கமிட்டியானது துவங்கும் வண்ணம் இந்த மாநாட்டின் பிரதிபலிப்பு இருக்கவேண்டும்.

விளிப்படிந்த சமுதாயமே தன்னை தற்காத்துக்கொள்ள முடியும்! வில்லிப்புணர்வு ஏற்படுத்த உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் குடும்பத்தோடு மாநாட்டிற்கு வருவதை உறுதிப்படுத்துவோம்.

ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், வார்டுகளிலிருந்தும் மக்களை மாநாட்டில் கலந்து கொள்ளவைப்போம்…

மாநாடு குறித்த தகவலை பரப்புவோம் …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *