24-2-2017
பத்திரிகை அறிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் எஸ்.ஆர். சரவண பெருமாள், சு. சிதம்பரம் ஆகியோர் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. எஸ்.ஆர். சரவண பெருமாள் அவர்கள் அகால மரணச் செய்தியை அடுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் திரு. சு. சிதம்பரம் மறைந்த செய்தி வந்தது. இருவரும் ஆரம்ப காலம் தொட்டே தமிழகத்தில் இந்துத்துவ கொள்கை ஏற்றெடுத்து வளர்த்தவர்கள். தன்னலம் கருதா தொண்டாற்றி முன் உதாரணமாக திகழ்ந்தவர்கள். தூத்துக்குடிச் சேர்ந்த சரவணபெருமாள் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பல பொறுப்புகளை வகித்து திறம்பட செயலாற்றியவர்.
சு.சிதம்பரம், இந்து முன்னணி தொடங்கிய காலம் தொட்டு சுமார் 20 ஆண்டுகள் பெரும்பணி ஆற்றியவர். இந்து முன்னணியின் அலுவலக செயலாளராக தொடங்கிய அவரது இயக்கப் பணி, இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளராக சிறப்பாக செயலாற்றியவர். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்குச் சென்று பல பொறுப்புகளை வகித்து வந்தார்.
இருவரது மறைவுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்களது திடீர் மறைவால் வருத்தமுறும் இயக்க சகோதரர்களுக்கும், குடும்பத்தாருக்கும் இந்து முன்னணி ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறது.
அவர்கள் இருவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)