Tag Archives: #சதுர்த்தி2017

வீரத் துறவி அழைக்கிறார்! விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக கொண்டாடுவோம் வாரீர்

சென்னை…

இந்துமுன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களும், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்களும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது….

கடந்த 33 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்துமுன்னணி பேரியக்கத்தால் மிகச் சிறப்பான வைகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவின் மூலம் சாதிய ஏற்றத் தாழ்வுகள் , பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் களையப்பட்டு இந்துக்கள் மத்தியில் ஒற்றுமை, விழிப்புணர்வு , எழுச்சி ஏற்பட்டு வருகிறது.

33 ஆண்டுகளுக்கு முன்பாக திருவல்லிக்கேணியில் ஒரு பிள்ளையாரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவானது இன்று தமிழகம் முழுதும் இந்து எழுச்சிப் பெருவிழாவாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுதும் 1 லட்சம் பிள்ளையார்களுக்கும் மேலாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 10000 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீதி உலாக்களும், 300 க்கும் அதிகமான முக்கிய நகரங்களில்,ஊர்களில் விசர்ஜன ஊர்வலமும் நடைபெறுகிறது.

விழா சிறப்பாக நடைபெற பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை நாடுகிறோம் எனவும்,

எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் அருளால் தமிழக மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறோம்.