Tag Archives: தொழிலாளர்கள்

மூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்

10.08.2020

கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கடுமையான மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசும், மாநில அரசும் நிதி அளித்துள்ளது .

இந்த சமயத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் இந்து முன்னணியின் பணிவான கோரிக்கை

சாத்தான்குளத்தில் உயிரிழந்த இரண்டு பேருக்கு இலட்சக்கணக்கில் அனைத்து கட்சிகளும் பணம் வழங்கினார்கள் .தமிழக அரசு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது .

அதேபோல மூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பது இந்து முன்னணி கோரிக்கை

ஒருவேளை தமிழக அரசு அவர்கள் குடும்பத்தினருக்கு வேலை கொடுக்காவிட்டால், இதற்காக எதிர்கட்சி தலைவர் குரல் கொடுக்காவிட்டால், சிறுபான்மை மக்களுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா? என்ற ஒரு கேள்வி எழும் அல்லது இன்னும் தேர்தல் எட்டு மாதம் தான் இருக்கிறது அந்த தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான் சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு நிதிஉதவி, அரசு வேலை தமிழக அரசு கொடுத்ததா என்ற ஒரு ஐயப்பாடு வரும்

ஆகவே நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக ஏழைத் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.

ஆகவே சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு வழங்கியது போல நிதிஉதவியும், அரசு வேலையும் கேரளாவில் மண்சரிவு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கும் வழங்க வேண்டும்

மேலும் இதற்கு முன் கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கேரள அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. ஆனால் தற்போது தமிழக கூலி தொழிலாளர்களுக்கு கம்யூனிச கேரள அரசு 2 லட்சம் ரூபாய் தான் வழங்கியுள்ளது இது கண்டிக்கத்தக்கது.

அரசுகள் பாகுபாடு பார்க்காமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை ஒட்டுமொத்தமாக காவல்துறையினர் மீது புகார் கூறும் அரசியல் கட்சிகள் இப்பொழுது பாராமுகமாக இருப்பது ஏன்?

*வி.பி.ஜெயக்குமார்*
*இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர்*
பரமன்குறிச்சி