தூத்துக்குடி மாநகா் மாவட்ட இந்து முன்னணி சாா்பாக வீரதுறவீ ஜயா. இராமா.கோபாலன் அவா்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
Category Archives: நெல்லை கோட்டம்
இராம.கோபாலன் ஜி 88வது பிறந்தநாள்
இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ஐயா இராம.கோபாலன் ஜி
88வது பிறந்தநாள் முன்னிட்டு
நெல்லை மேற்கு மாவட்ட இந்துமுன்னணி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்
சுரன்டை பேருந்து நிலையம் முன்பு செல்வவிநாயகர் திருக்கோவில் சிறப்பு பூஜை நடைபெற்று ஆயிரகணக்கான பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது
ஸ்ரீ விநாயகர் அகவல் ஒப்புவித்தல் போட்டி
தூத்துக்குடி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் 10.10.14 அன்று பள்ளி மாணவர்களுக்கான ஸ்ரீ விநாயகர் அகவல் ஒப்புவித்தல் போட்டி உடன்குடி- தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளியில் நடைபெற்றது.
இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் திரு. V.P. ஜெயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.பொன்.பரமேஸ்வரன் ., திரு. சுடலைமுத்து.,நகர பொறுப்பாளர் திரு.சித்திரை பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் திரு. நல்லசிவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி திரு. ஜோதிமணி அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .
இந்துக்களை இழிவுபடுத்தும் கிறிஸ்தவ மத போதகர்
தூத்துக்குடி குலசேகரபட்டினத்தில் ஆண்டுதோறும் நடை பெரும் தசரா ( நவராத்திரிப் பண்டிகையை) மிகவும் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தும் வகையில், குரும்பூர் பகுதியில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்யும் மோகன்.C.லாசரஸ் என்ற பாதிரியின் பிரசாரக் கூட்டம் இத்தகைய வேலையை அப்பாதிரியின் உத்தரவின் பேரில் வழங்கியுள்ளது.
இந்துமுன்னணி மானிலத்த தலைவர் திரு. V. P. ஜெயகுமார் தலைமையில் இது பற்றி ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து நாளை (20.09.14) அன்று இந்துமுன்னணி இயக்கத்தின் சார்பில் மாபெரு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
கிறித்தவ பாதிரிகளின் அட்டூழிய, அநியாயங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுவருவதையும், அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையையும், அரசையும் இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை கேவலப்படுத்துகின்றவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை பெற்றுத் தரவேண்டுமென கேட்டுக்கொள்கிறது.