Monthly Archives: March 2016

பேச்சாளர் பயிற்சி முகாம் ஏப்ரல் 2 & 3

இந்து முன்னணியின் மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சிமுகாம் திருப்பூரில் நடைபெறுகிறது.
தமிழகத்திலிருந்து ஆர்வமுள்ள புதிய நபர்களை இயக்கத்தின் பேச்சாளர்களாக ஆக்கிடும் முயற்சியாக இந்த முகாம் நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிமுகாமில் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதம் செய்திடவும், பல தலைப்புகளில் பேசிப் பழகிடவும் பயிற்சி அளிக்கப்படும்.
வீரத்துறவி உட்பட பலர் புதிய பேச்சாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கிட வருகின்றனர்.

கோவை கோட்ட செயலாளர்கள் -அறிவிப்பு

கோவை கோட்ட  செயலாளர்களாக திருப்பூர் சேவுகன் அவர்களும் , கோவை குணா அவர்களும்  பொறுப்பேற்றனர்.ஈரோட்டில் நடந்த கோவை  பொதுக்குழுவில்  அமைப்பாளர் திரு.பக்தன் ஜி அறிவித்தார்.

குணா கோவை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளராகவும் , சேவுகன் அவர்கள் திருப்பூர்  பொதுச் செயலாளர் ஆகவும் திறம்பட இயக்கப்பணி ஆற்றி வந்தனர்.

Dr. அரசு ராஜா மாநில பொதுச்செயலாளர் – வீரத்தறவி அறிவித்தார்

இந்துமுன்னணி  கோவை  மண்டல  பொதுக்கழு கூட்டம்  ஈரோட்டில் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியில்  வீரத்துறவீ  இராம. கோபாலன் அவர்கள் மருத்துவர் திரு.அரசு  ராஜா அவர்கள் மாநிலப்  செயலாளராக பொறுப்பேற்று வழிநடத்துவார் என அறிவித்தார்.

குமரி பகுதியில் இந்துமுன்னனியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு  வருபவர் திரு.அரசு ராஜா அவர்கள்.
dr

 

இந்துமுன்னணி மாநிலத் தலைவராக காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்

ஈரோடு மாநகரில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 14 மாவட்டங்களுக்கான மண்டலப் பொதுக்குழு நடைபெற்றது.

14 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த நகர, ஒன்றிய , மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 684 பேர் கலந்து கொண்டனர்.
நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி திரு. ராம.கோபாலன் அவர்களின் வழிகாட்டுதலில் , மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச் செயலாளர்கள் திரு. நா.முருகானந்தம் , திரு. சி.சுப்ரமணியம் , மாநிலச் செயலாளர்கள் திரு. கிஷோர்குமார், தாமு வெங்கடேஸ்வரன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் , திரு.செந்தில்குமார் ஆகிய மாநில  பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய வீரத்துறவி இந்துமுன்னணி மாநிலத் தலைவராக திரு.காடேஸ்வரா  சுப்பிரமணியம் அவர்கள் இனி பணியாற்றுவார் என அறிவித்தார்.
பொறுப்பேற்ற திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள்  , தாணுலிங்க நாடார் ஐயா வகித்த பொறுப்பு இது  அந்த வகையில் இதன் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவேன் எனக் கூறினார்.
cs

சட்டவிரோத சர்ச் – அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி கோவை மாவட்ட சார்ப்பில்  காளப்பட்டி உள்ள  பழமையான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அருகில் அனுமதி இல்லாமல் நடைபெரும் (Church) சர்ச் தடுத்து நிறுத்தாத காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ,நாள்:16.3.2016 இடம்:காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில்  #நேரம்:4.00மணிக்கு மாநில பொது செயலாளர் திரு. கடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் 3.000 பேர் காலந்து கொண்டனர்

image

image

image

மிஷன் 2020

தமிழக  இந்து முன்னணி வரலாற்றில்  ஒரு சாதனை நிகழ்ச்சி…
நமது லட்சியம் 20/ 20 ல்  “வீடுதோறும் இந்துமுன்னணி; வீதி தோறும் கிளைக்கமிட்டி”
இந்த  இலக்கை அடைய முதற்கட்ட நிகழ்ச்சி திருப்பூர் மாநகர் மாவட்ட கிழக்கு நகர் பகுதியில் நடைபெற்றது.

திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் ஒரு பகுதியான கிழக்கு நகர் பகுதியின்  7 வார்டுகளை 20 ஆக பிரித்து, அந்த இருபது பகுதிகளில்  (20*20 பேர் ) 400 புதிய  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்டம் இதுபோல 23 பகுதிகளைக்கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது .
ஒரு நகரில் 400 பேர் என்றால் 23*400=9200 பொறுப்பாளர்கள் …..

இன்றைய செயல் ! நாளைய வரலாறு!!
புதிய சரித்திரம் படைப்போம்.

image

image