Daily Archives: March 28, 2020

கொரோனா பேரிடர் நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

28.03.2020

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
பெறுனர் :
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம் சென்னை
பொருள்: கொரோனா வைரஸ் பேரிடர் நிவாரணப் பணிகள் – தன்னார்வலர்கலாக பணியாற்ற அனுமதி
அன்புடையீர் வணக்கம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தங்களது அரசு மிகச் சிறப்பான வகையில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் பல சமயங்களில் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் வெளியே வந்தாலும் அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.
எனவே இதைக் கருத்தில் வைத்து அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.
தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அனுமதி வழங்கிட வேண்டுகிறோம்.
நன்றி
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்