Daily Archives: June 26, 2018

பாரதமாதா கோவில் அமைக்க நிதி – தமிழக அரசுக்கு இந்துமுன்னணி மாநில தலைவர் பாராட்டு

தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா திருக்கோயில் அமைக்க ரூபாய் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது
விடுதலைப் போராட்ட வீரர் திரு சுப்ரமணிய சிவா அவர்கள் சுதந்திர போராட்ட காலத்தில் இந்த நாட்டை இது ஒரு வெறும் கல்லும் மண்ணும் இல்லை, இந்த நாட்டு மக்களுடைய தெய்வம் என்று கூறினார்.
இந்த நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்பட்ட போதும் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் இது ஒரே நாடு, இந்த நாட்டை நேசிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சிவா அவர்கள் விரும்பினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதற்காக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை .
திரு.குமரிஅனந்தன் அவர்கள் தொடர்ந்து பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற சுப்ரமணிய சிவா அவர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து போராடி வந்தார் .
இந்த அறிவிப்பு திரு. குமரி அனந்தன் அவர்களுக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
தமிழக அரசுக்கு இந்து முன்னணி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.