Daily Archives: March 10, 2017

செங்கல்பட்டு பெருமாள் மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் 

காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள அழகு சமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட மகா சக்தி பொன்னியம்மன்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பெருமாள் மலை மீது ஆண்டுதோறும் கண்ணபிரான் உற்சவம் நடைபெற்று வருகிறது. மலை மீது பெருமாளின் திருமண் இட்டு இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

இக்கோயில் மலை அழகுசமுத்திரம் பஞ்சாயத்திற்கு சொந்தமானதென செங்கல்பட்டு நீதிமன்றத்தால் 18.10.1996இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இம்மலையில் சிலுவையை நட்டனர். உடனடியாக கிராம நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்குப்பட்டுஅது அகற்றப்பட்டது. 2006இல் மலையில் திடீரென்று சர்ச் கட்ட ஊரில் கலவரம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிரி எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்.

அச்சிரபாக்கம் பாதிரி ஜேக்கப்ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்வழியை கால்வாயை மூடி அதன் மீது சர்ச்க்கு அடிக்கல் நாட்டினார். திடீரென்று, 24.12.2016 இரவு பெருமாள் மலை முழுவதையும் ஆக்கிரமித்து வனத்துறையால் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை ஜெ.சி.பி. இயந்திரம் கொண்டு வேரோடு அகற்றினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களான பொம்மைகளை அமைத்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள்இந்து முன்னணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டார். ஆர்.டி.ஓ. ஜெயசீலன்கடைசி பொம்மையை அகற்றவிடாமல் தடுத்துவிட்டார்.

இதனை எதிர்த்து தொடர்ந்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் 4.3.2017 வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை பஜனை ஊர்வலத்தின் போது சோகண்டியை சார்ந்த கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பக்தர்கள் மீது மோதியதுடன்ஆயுதங்களால் தாக்கியும்சாமியை அவதூறாக பேசியும்மிரட்டினர். ஊர் மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்குக் காரணமான மதமோதல்களை உருவாக்கி கலவரத்தை நடத்த திட்டமிட்ட ஜேக்கப் பாதிரியை விட்டுவிட்டது.

இதுபோன்ற தேசவிரோதமதவெறி செயலைக் கண்டித்து இந்துக்கள் 6.3.2017 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 7.3.2017 பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஆர்.டி.ஓ. ஜெயசீலன்கிராம மக்களிடம் தான் எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்திட நிர்பந்தித்துள்ளார். மீறினால், 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளை அகற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த ஜனநாயக விரோதசட்டவிரோதமாக செயல்படும் ஆர்.டி.ஓ. ஜெயசீலன் மீது துறை ரீதியாலன நடவடிக்கை எடுக்கவும்கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்யவும்அவர்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும்சிலுவையை நட்டு மலைகளை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ சதியை முறியடிக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசைமாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

 

என்றும் தேசியதெய்வீகப் பணியில்

 

 

(இராம கோபாலன்)