இந்து முன்னணியின் மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சிமுகாம் திருப்பூரில் நடைபெறுகிறது.
தமிழகத்திலிருந்து ஆர்வமுள்ள புதிய நபர்களை இயக்கத்தின் பேச்சாளர்களாக ஆக்கிடும் முயற்சியாக இந்த முகாம் நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிமுகாமில் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதம் செய்திடவும், பல தலைப்புகளில் பேசிப் பழகிடவும் பயிற்சி அளிக்கப்படும்.
வீரத்துறவி உட்பட பலர் புதிய பேச்சாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கிட வருகின்றனர்.