Daily Archives: March 28, 2016

Dr. அரசு ராஜா மாநில பொதுச்செயலாளர் – வீரத்தறவி அறிவித்தார்

இந்துமுன்னணி  கோவை  மண்டல  பொதுக்கழு கூட்டம்  ஈரோட்டில் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியில்  வீரத்துறவீ  இராம. கோபாலன் அவர்கள் மருத்துவர் திரு.அரசு  ராஜா அவர்கள் மாநிலப்  செயலாளராக பொறுப்பேற்று வழிநடத்துவார் என அறிவித்தார்.

குமரி பகுதியில் இந்துமுன்னனியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு  வருபவர் திரு.அரசு ராஜா அவர்கள்.
dr

 

இந்துமுன்னணி மாநிலத் தலைவராக காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்

ஈரோடு மாநகரில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 14 மாவட்டங்களுக்கான மண்டலப் பொதுக்குழு நடைபெற்றது.

14 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த நகர, ஒன்றிய , மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 684 பேர் கலந்து கொண்டனர்.
நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி திரு. ராம.கோபாலன் அவர்களின் வழிகாட்டுதலில் , மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச் செயலாளர்கள் திரு. நா.முருகானந்தம் , திரு. சி.சுப்ரமணியம் , மாநிலச் செயலாளர்கள் திரு. கிஷோர்குமார், தாமு வெங்கடேஸ்வரன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் , திரு.செந்தில்குமார் ஆகிய மாநில  பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய வீரத்துறவி இந்துமுன்னணி மாநிலத் தலைவராக திரு.காடேஸ்வரா  சுப்பிரமணியம் அவர்கள் இனி பணியாற்றுவார் என அறிவித்தார்.
பொறுப்பேற்ற திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள்  , தாணுலிங்க நாடார் ஐயா வகித்த பொறுப்பு இது  அந்த வகையில் இதன் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவேன் எனக் கூறினார்.
cs