திருப்பூர் மாநகர் இந்து அன்னையர் முன்னணிசார்பில் பெண்கள் கலந்து கொண்ட மிகப் பிரமாண்டமான சுமங்கலி பூஜை நடைபெற்றது. RSS மாநிலத் தலைவர் திரு. R V S மாரிமுத்து, RSS கோட்ட தலைவர் திரு. ஆர்ம்ஸ்டிராங் பழனிச்சாமி, இந்துமுன்னணி மாநில பொதுசெயலாளர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் திரு. மூர்த்திமற்றும் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.RSS பெண்கள் அமைப்பான ராஷ்ட்ரீய சேவிகா சமிதி மாநில பொறுப்பாளர் திருமதி. கோமதி நவீன் அவர்களும், திரைப்படநடன இயக்குனர் செல்வி. காயத்ரி ரகுராம் அவர்களும் சிறப்புறையாற்ற, நிகழ்ச்சி ஆன்மீக எழுச்சியுடன் நடைபெற்றது. சுமார் 2007 பெண்கள் கலந்து கொண்டு குடும்ப நலம் வேண்டியும், நாடு சுபிட்சமடையவும் பிரார்த்தனை செய்து சுமங்கலி பூஜை செய்தனர்.