Monthly Archives: January 2015

இந்துமுன்னணி மாநில மாநாடு

இந்துமுன்னணி பேரியக்கத்தின் 7வது மாநில மாநாடு கலியுகாப்தம் 5117, மன்மத ஆண்டு, வைகாசி மாதம், 24 ம்தேதி (ஜூன் 7 2015) கோவையில் நடைபெற உள்ளது. இந்துமுன்னணி பேரியக்கத்தின் முதல் மாநிலத் தலைவர் அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு பிறந்த நாள் 2015 பிப்ரவரி மாதம் 17 ம்நாள் வருகிறது . எனவே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துமுன்னணி பேரியக்கம் நடத்தும் மாநில மாநாடு இம்முறை அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு விழா மாநாடாக கொண்டாடிட இந்துமுன்னணி பேரியக்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கென இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/pages/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/450366001779109?ref=hl

 இம்மாநாடு இந்துக்களின் எழுச்சி கீதமாக இருக்கும். அனைவரும் இப்போதிருந்தே தயாராவோம். கோவை மாநகரை காவிக்கோட்டை ஆக்குவோம்,

பாரத் மாதா கீ ஜெய்!

maanaadu

பயங்கரவாதத்திற்கு தீர்வு?

paris

பாரிஸில் “சார்லி ஹெப்டோ‘ பத்திரிகை அலுவலகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஒரு பெண் காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலை நடத்தித் தப்பிச் சென்ற இருவர் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர்.

இவர்களின் கூட்டாளியாகச் செயல்பட்ட அமேடி கூலிபலி, யூத பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளை சிறைப்பிடித்தார். இந்த சம்பவத்தில் பிணைக்கைதிகளாக இருந்த 4 யூதர்கள் கொல்லப்பட்டனர். போலீஸார் அங்கு நிகழ்த்திய தாக்குதலில் கூலிபலி கொல்லப்பட்டார்.

அவருடைய கூட்டாளியான ஹையட் பூமடியன் எனும் பெண்ணை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிரான்ஸ் எல்லையைக் கடந்து, துருக்கி வழியாக சிரியாவுக்குத் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது

பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலைகள் இஸ்லாமிய மதத்தின்  உண்மை சொரூபத்தை  உலகிற்கு எடுத்துக் காட்டியது.  

எங்கெல்லாம் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகமாகிறதோ அங்கெல்லாம் அவர்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல் தனித்து இயங்கி தேசத்தின் சுதந்திரத்திற்கு, இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக ஆவார்கள் என்ற வரலாற்று உண்மை மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

சுதந்திரம்(தனி மனித ), சமத்துவம் , சகோதரத்துவம் , விமர்சனம் செய்வதற்கான உரிமை என்ற ஜனநாயகத்தின் அத்துணை கூறுகளையும் தகர்த்து  எறியக்கூடிய “ஜிகாத்” எனும் மதவாத அசுர சக்தியை உலகம் காணத் துவங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோயாக ஜிகாத் பயங்கரவாதம் மாறி வருகிறது.

இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர் ; அதே சமயம் பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எள்ளளவும் சகிப்புத்தன்மையற்ற ஒரு சமுதாயமாக இஸ்லாம் ஆகி வருகிறது.

இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு  எந்தவித அரசியல் முகமும் கிடையாது. தேசம், பண்பாடு, கலாசாரம்  எனும் அடிப்படையும் கிடையாது. உலகை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் எனும் அடிப்படைவாத கருத்தை முன்னிறுத்தி பயங்கரவாத படுகொலைகளை அரங்கேற்றி அச்சுறுத்தும் செயலே முன்னிறுத்தப்படுகிறது.

அமெரிக்கா சந்தித்த அல் – குவைதா தாக்குதல், இந்தியாவில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் உட்பட சிரியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்தவை, நடப்பவை என அனைத்தும்  மத நம்பிக்கை என்ற பெயரில் எழுந்த மதவெறித் தாக்குதல்கள்.

அதற்கு அடிப்படையாக மதநம்பிக்கையுடன், இணையதள தகவல் மூலம் ஒருங்கிணைப்பு, அதற்கேற்ப சந்தை பொருளாதாரம் மூலம் பண பரிவர்த்தனை, ஹவாலா, போதைப்பொருள் கடத்தல்  ஆகியவை சேர்வதால், இவற்றை எளிதில் கண்டறிவது  அல்லது தடுப்பது மிகுந்த சவாலாக அனைத்து நாடுகளுக்கும் இருக்கிறது.

எனினும் இந்த சம்பவங்களுக்குப் பிறகு இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உலகநாடுகள் (குறிப்பாக – பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா)  சிந்திக்க ஆரம்பித்துவிட்டன.

அதே சமயம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சில  தினங்களுக்கு முன் நடந்த பேரணி, உலகின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இது பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தாக அமைந்தது. பயங்கரவாதத்தை அனுமதித்து, சுதந்திரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது என்ற இந்த அமைதிப் பேரணி, உலகிற்கு புதிய செய்தியை சொல்லியிருக்கிறது.

ஒன்றிணைந்த மக்கள் சக்தியே இத்தகைய பயங்கரவாத செயல்களை வேரறுக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறது.

எந்த நாடாயினும் பெரும்பான்மை மக்கள், பலம் மிக்கவர்களாக, ஒற்றுமை மிக்கவர்களாக இருப்பதன் அவசியம் உணர்ந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படாது என்பது உண்மை.

பாரதத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள்  ஜாதி, இன, மொழி வேற்றுமை கடந்து  இந்துக்கள் எனும் ஓருணர்வில் ஒன்றிணைந்து  செயல்படவேண்டியது அவசியம் என்பதை பாரிசில் நடந்த பேரணி வலியுறுத்துகிறது.

மக்கள் சக்தியே! மகத்தான சக்தி!!  

கட்டுரையாளர் : ச.ராஜேஷ்

7 வது மாநில மாநாடு – கோவை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் 7வது மாநில மாநாடு கலியுகாப்தம் 5117, மன்மத ஆண்டு, வைகாசி மாதம், 24 ம்தேதி (ஜூன் 7 2015) கோவையில் நடைபெற உள்ளது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் முதல் மாநிலத் தலைவர் அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு பிறந்த நாள் 2015 பிப்ரவரி மாதம் 17 ம்நாள் வருகிறது .

எனவே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துமுன்னணி பேரியக்கம் நடத்தும் மாநில மாநாடு இம்முறை அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு விழா மாநாடாக கொண்டாடிட இந்துமுன்னணி பேரியக்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கென இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடு இந்துக்களின் எழுச்சி கீதமாக இருக்கும். அனைவரும் இப்போதிருந்தே தயாராவோம். கோவை மாநகரை காவிக்கோட்டை ஆக்குவோம் பாரத் மாதா கீ ஜெய்

maanaadu

 

 

 

 

 

 

 

 

 

 

 

மண்டலப் பொதுக்குழு -மார்ச் 22 (மத்திய மாவட்டங்கள்)

திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் மத்திய மாவட்டங்குக்கான மண்டலப் பொதுக்குழு  மார்ச் 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் நடைபெறும்.

thee  last

மண்டலப் பொதுக்குழு -மார்ச் 15 (மேற்கு மாவட்டங்கள்)

கோவை,திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கான மண்டலப் பொதுக்குழு மார்ச் 15 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் நடைபெறும்.

vvivekanandar sticker_2

மண்டலப் பொதுக்குழு – மார்ச் 8 – (தெற்கு மாவட்டங்கள்)

நெல்லை,குமரி உள்ளிட்ட தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களுக்கான மண்டலப்  பொதுக்குழு  மார்ச் 8 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கையில் நடைபெறும்

.siva3.jpg

மண்டல பொதுக்குழு – மார்ச் 1( வடக்கு மாவட்டங்கள் )

சென்னை உட்பட தமிழகத்தின் வாடா பகுதி மாவட்டங்களுக்கான மண்டலப் பொதுக்குழு எதிர்வரும் மார்ச் 1 ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) ஆம்பூரில் நடைபெறும்.

AriseAwake_p