ஐ.ஏ.எஸ். சுந்தரம் அவர்கள் மறைவுக்கு
இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..
ஐ.ஏ.எஸ். சுந்தரம் அவர்கள் நேற்று இரவு மறைந்துள்ளார். அவர் திறமையான அதிகாரி, நல்ல அறிவாளியாகவும், நல்ல படைப்பாளியாகவும் விளங்கினார். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றியவர், நல்ல நிர்வாகி.
சாதாரணமாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தங்களது மீதி வாழ்நாளை சுகபோகமாக வாழ்ந்து கழிப்பர். அது மட்டுமல்ல, சமுதாயம் எப்படி போனால் என்ன, ஏதோ மரியாதையாக இருந்துவிட்டோம், இனியும் அப்படியே காலத்தை ஓட்டலாம் என நினைப்பார்கள்.
ஆனால், சுந்தரம் அவர்கள், பதவியில் இருக்கும்போதும், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஒரு அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த காட்டியவர்.
தனது திறமை, ஆற்றல், நேரம் எல்லாவற்றையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.
இந்துக்களுக்களின் உரிமைக்காக போராடும் குணம் கொண்டவர். பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
இப்படி எல்லா நற்குணங்களும் கொண்ட தேச பக்தரை நாடு இழந்துள்ளது, இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அன்னாரது ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
இச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம்.