திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வட மாநிலத்தை சேர்ந்த, தொழில் நிமித்தமாக வந்திருந்து குடியேறி தமிழகவாசிகளாகவே ஆகிப்போன வட இந்திய இந்து சகோதரர்கள் இந்து முன்னணி பேரியக்கத்தில் இணைந்து சமுதாயப்பணி ஆற்ற உள்ளனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி நடைபெறவுள்ள பெரும் விழாவில் அவர்கள் இந்துமுன்னணியில் இணைகின்றனர்.
இந்த விழாவிற்கு இந்துமுன்னணி மாநிலத் பொதுசெயலாளர் திரு.காடேஸ்வர சுப்ரமணியம் அவர்கள், மாநில அமைப்பாளர் திரு. நா. முருகானந்தம் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.
வட மாநில இந்துக்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. வித்யா பூஷன் சிங் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இந்துமுன்னணியில் இணைகின்றனர்.