தூத்துக்குடி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் 10.10.14 அன்று பள்ளி மாணவர்களுக்கான ஸ்ரீ விநாயகர் அகவல் ஒப்புவித்தல் போட்டி உடன்குடி- தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளியில் நடைபெற்றது.
இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் திரு. V.P. ஜெயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.பொன்.பரமேஸ்வரன் ., திரு. சுடலைமுத்து.,நகர பொறுப்பாளர் திரு.சித்திரை பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் திரு. நல்லசிவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி திரு. ஜோதிமணி அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .