விநாயகர் வழிபாடும்…. தமிழக நாணயங்களும்

நன்றி தினமலர் & VSK சென்னை 


சென்னை: இந்திய நிலப்பரப்பு முழுவதும்,முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் வழிபாடுதமிழகத்திற்கு வந்தது குறித்துஇருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒன்றுசங்க காலத்திலேயேதமிழகத்தில்விநாயகர் வழிபாடு இருந்தது என்பது. மற்றொன்றுபல்லவர் காலத்திற்குப் பின்னர் தான்விநாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது என்பது. இந்த இருவேறு கருத்து நிலை குறித்துநாணய வழி வரலாற்று ஆய்வாளர் ரா.மன்னர் மன்னன் பகிர்ந்து கொண்டது:

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்புல் இலை எருக்கம் ஆயினும்உடையவைகடவுள்பேணேம் என்னா‘ என்னும்புறநானுாற்றுப் பாடலின், 106வது அடியைக் கொண்டுஎருக்கம் பூவைக்கொண்டு வணங்கும் கணபதி வழிபாடு,சங்க காலத்திலேயே தமிழகத்தில்இருந்துள்ளது எனதமிழ் ஆய்வாளர்களில் ஒருசாரர் கூறுகின்றனர். ஆனால்அதை உறுதிபடுத்துவதற்கான துணைச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

கி.பி., 5ம் நுாற்றாண்டு

கி.பி., 630 – 668 வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னனானமுதலாம் நரசிம்மவர்மன்,வாதாபியை வென்றுதமிழகத்திற்கு விநாயகரைக் கொண்டு வந்தான் எனவும்,தமிழகத்தில் நிலவும் பிள்ளையார் வழிபாட்டுக்கு பல்லவர்களே காரணமானவர்கள் எனவும் கூறப்பட்டு வந்தது.

பின்பிள்ளையார் பட்டி விநாயகர்வாதாபி விநாயகருக்கும் முந்தையவர் என்பதை நிறுவும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில்முந்து தமிழ்க் கல்வெட்டுடன்,மூத்த கணபதியின் சிற்பம் ஒன்றுசமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேஉள்ள ஆல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது எனவரலாற்று ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.

கொங்கு சேரர்கள்

ஒருபக்கம்விநாயகர் வழிபாட்டின் துவக்கம் பின்னோக்கி செல்வதைப் போலவேவிநாயகர்வழிபாடு வலுப்பெற்ற காலமும்வரலாற்றில் பின்னோக்கியே செல்கிறது. இப்படி விநாயகர் வழிபாடு குறித்த ஆய்வுதமிழகத்தில் நிறைவு பெறாமல் உள்ளது. இந்த நிலையில்,கோவில்களையும் கல்வெட்டுகளையும் மட்டுமேஅடிப்படையாகக் கொண்டுஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள்,

விநாயகர் உருவம் உள்ள நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அப்போது தான்தென்னிந்தியாவில் விநாயகர் வழிபாட்டின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

வடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தென்னிந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும்நிலையில்வட இந்தியாவை விட,தென்னிந்தியாவிலேயே அதிகளவிலும்அதிகவகையிலும்விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.

கி.பி., 15 – 16ம் நுாற்றாண்டுகளில்இன்றைய கோவைப் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தகொங்கு சேரர்கள்,இந்தியாவிலேயேமுதன்முதலில்விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டனர்.

அவர்களைத் தொடர்ந்துதென்னிந்தியாவில் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவிஜயநகரப் பேரரசும்அதன்பின் தலையெடுத்த மதுரைதஞ்சைசெஞ்சி நாயக்கர்களும்,மராட்டியர்களும்ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளும் விநாயகர் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள்பலவித விநாயகர் உருவங்களை பொறித்தனர். அதுவிநாயகர் வழிபாட்டிற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும்,மக்களிடம் கணபதி உருவத்திற்கு கிடைத்த வரவேற்பையும் காட்டுகிறது.

இஸ்லாமிய அரசும் ஆநிருத்த கணபதியும் கி.பி., 1693 முதல் 1801 வரைஇஸ்லாமிய அரசர்களான ஆற்காடு நவாபுகளின் ஆட்சிதமிழகத்தில் வலுவாக இருந்தது.

அவர்களும்தமிழக நாணயங்களில்கணபதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறிந்தனர். சமய நல்லிணக்கத்திற்காக,அவர்களின் நாணயங்களில் விநாயகர்உருவங்களை பொறித்தனர்.

வழக்கமாககோவில்களிலும்,நாணயங்களிலும் அமர்ந்த நிலையில் இருந்தவிநாயகருக்குப் பதிலாகநிற்கும் விநாயகரான ஆநிருத்த கணபதி உருவத்தை முதன்முதலில் நாணயங்களில் பொறித்தவர்கள்ஆற்காடு நவாபுகள் தான். அதே

நாணயத்தின் பின்புறம், ‘நவாபு‘ எனதங்களின் பெயரையும் பொறித்தனர்.இதுவரை,தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட,விநாயகர் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால்வட இந்தியாவிலோ ஒன்றிரண்டு வகை விநாயகர் நாணயங்களே கிடைத்து உள்ளன. என்றாலும்,அவை எந்த அரசால் வெளியிடப்பட்டவை என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஒரு மாபெரும் வரலாற்று முரணாக உள்ளது. இதனால்வட இந்திய நாணய சேகரிப்பாளர்களும்ஆய்வாளர்களும்,தென்னிந்தியாவில் கிடைக்கும் விநாயகர்நாணயங்களை மிகவும் முக்கியத்துவம் அளித்து சேகரித்து வருகின்றனர்.

அதனால்தென்னிந்தியாவில்நாணயங்களின் வழியாகவும் விநாயகர் வரலாற்றை ஆராய்ந்தால்பல புதிய உண்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1600059


— 


VANDE MATARAM
——————————————
12, M V NAIDU STREET,
CHETPUT,
CHENNAI – 600 031
VISIT: http://rsschennai.blogspot.com/

http://vsktamilnadu.org/

——————————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *