கோவில் சொத்து வருமானம் கோயிலுக்கு – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு
இந்து சமயம் மற்றும்
இந்து சமுதாய ஒற்றுமைக்கும் மையமாக விளங்குவது கோயில்கள் தான்.
தமிழர்களின் அடையாளம் வானுயர்ந்து நிற்கும் திருக்கோயில்கள் தான் .
எதுவரை கோயில்கள் மக்கள் கைகளில் இருந்ததோ அதுவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின . எப்போது கோயில்கள் அரசியல்வாதிகள் கைகளுக்குள் சென்றதோ அப்போதே சர்வநாசம் தொடங்கியது .
60 ஆண்டுகளுக்கு முன் 5.25 லட்சம் ஏக்கர் இருந்த கோயில் நிலங்கள் தற்போது 4.75 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.
சுமார் 50,000 ஏக்கர் நிலம் கொள்ளை போயுள்ளது .
ஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டிய கோயில் நிலம் மற்றும் இடத்திற்கான குத்தகை தொகை இந்த ஆண்டு 120 கோடி தான் வசூல் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் 1700 சிலைகள் போலியானவை என பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது .
பத்தமடை பெருமாள் கோயில் உட்பட நூற்றுக்கணக்கான கோயில்கள் பொதுமக்கள் நிதி உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்ட போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மாற்று இடம் கூட தராமல் வாய்மூடி மௌனம் காத்தது.
கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2000 கோயில்கள் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களின் புணர்நிர்மான செலவிற்காக ஆண்டிற்கு ரூபாய் 125 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி இறைக்கிறது அரசு.
ஆனால் இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கிறார்கள் .
கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இலவச தரிசனம் முடியுமானால் தமிழகத்தில் அது முடியாமல் போனது ஏன்?
கோயில்களில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உருவாக்கி பொருளாதார தீண்டாமையை கொண்டுவர அரசு காரணமாக இருப்பது அவமான கரமான செயலாகும்.
கோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை ஒழிக்க, சிலைத் திருட்டை தடுக்க, பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு
அரசு ஆலயத்தை விட்டே வெளியேற வேண்டியது தான்.
இந்துக்களே! சிந்திப்போம்!!
ஒன்றுபடுவோம் !!கோயிலை காப்போம்!!!.