தமிழகம் முழுதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. திருப்பூரில் பெய்த மிக பலத்த மழையின் காரணமாக மக்கள் வசிக்கும் பல குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக நொய்யல் கரைப்பகுதி ஓரமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் நிவாரணப்பணிகளில் இந்துமுன்னணி ஊழியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். மேலும் உணவு விநியோகமும் நடைபெற்றது.