ஆண்டுதோறும் மக்களை வீடுதோறும் சென்று சந்திக்கும் மக்கள் தொடர்பு இயக்கத்தினை இந்துமுன்னணி பேரியக்கம் நடத்துகிறது. தமிழகத்தில் இந்துக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை பற்றி வீட்டுக்கு வீடு சென்று அவர்களை நேரிடையாக சந்தித்து சுற்றறிக்கை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி இந்த மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி காலை முதல் மாலை வரை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிளைக் கமிட்டி ஊழியர்களும் குறைந்தது 100 வீடுகளாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் இந்துமுன்னணி களமிறங்குகிறது. இந்துக்களின் சிந்தனைக்கு என்ற தலைப்பில் இந்து மதத்தின் பெருமைகள், மதம் மாறினால் என்ன ஆகும், சந்தர்ப்பவாத அரசியல் போன்ற சிந்தனைகளை கையிலெடுத்து வீடுதோறும் வருகிறது இந்துமுன்னணி.