திருப்பூர் வஞ்சிபாளையம் பாரதியார் குருகுலத்தில் 108 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் திரு.மூர்த்தி ஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிகாட்டினார். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் திருமதி.சாவித்திரி மூர்த்தி அவர்கள் பூஜை நடத்தினார். குருகுல மாணவர்களின் சிறப்பு பஜனை நிகழ்ச்சியுடன் பூஜை சிறப்பாக நடந்தது. இந்துமுன்னணி மாநில பேச்சாளர் திரு.சிங்கை பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.