நாடுமுழுதும் இன்று சரஸ்வதி பூஜை ., ஆயுத பூஜை கொண்டாடி வரும் வேளையில் நாம் அனைவரும் நமது இல்லங்களில் இன்று கொண்டாடும் ஆயுத பூஜையை சக்தி பூஜையாக கொண்டாட வேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.
பண்டைய காலத்தில் நமது வாழ்க்கைமுறையுடன் கலந்திருந்தது போரும்-ஆயுதமும்., உழவும்- உழவுக் கலன்களும். ஓவ்வொரு வீட்டிலும் போர் மறவன் இருந்தான், உழவனும் இருந்தான். துரதிருஷ்டவசமாக இன்று இந்த இருவரும் ஒவ்வொரு வீட்டிலும் இல்லை. ஆகவே கலன்களின் தேவையும் குறைந்துவிட்டது. தேவையுமே குறைந்துவிட்டது.
நவராத்திரி மற்றும் விஜயதசமி வழிபாடுகள் பல நூற்றாண்டுகளாய் நாடு முழுதும் தசரா என்ற பெயரிலும் பல்வேறு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா மிகப்பெரும் மக்கள் விழாவாக அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடியதன் காரணம் நமது தேசத்தின் மீதும் தர்மத்தின் மீதும் ஏற்பட்ட தாக்குதல்களை முறியடிக்கவேண்டும் என்பதுதான்.
காலம் மாறியும் கோலம் மாறவில்லை என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.
எனவே இன்று நாம் நமது இல்லங்களில் கொண்டாடும் இந்த ஆயுத பூஜையை சக்திபூஜையாக.., அதாவது நமது வழிபாட்டு முறைக்கோ, வாழ்க்கை முறைக்கோ , தேசத்திற்கோ ஆபத்து ஏற்படுமெனில் துணிவாக எதிர்த்து நின்று முறியடிக்கக்கூடிய பலத்தை, மனத்திண்மையை வழங்கிட எல்லாம் வல்ல ஆதி பராசக்தி அன்னையை பிரார்திப்போம்