மதம் மாறுவது அவமானம் – தாய் மதம் திரும்புவது தன்மானம் – விநாயகர் சதுர்த்தி விழா-ஆகஸ்ட் 29

தமிழகம் முழுதும் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி சுமார் 50,000 க்கும் மேற்ப்பட்ட விநாயகர் திரு உருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சுமார் 1000 இடங்களில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத காகிதக் கூழில்  தயாரிக்கப்பட்ட திருவுருவச் சிலைகள் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது.

தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வருகின்ற மதமாற்றம்  தடுத்து நிறுத்தப்பட வேண்டும், மதம்மாறியவர்களை தாய்மதம் திருப்பப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி இவ் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட இந்துமுன்னணி தீர்மானித்து உள்ளது.

இவ்விழாவில் அனைவரும் பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.