தூத்துக்குடி குலசேகரபட்டினத்தில் ஆண்டுதோறும் நடை பெரும் தசரா ( நவராத்திரிப் பண்டிகையை) மிகவும் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தும் வகையில், குரும்பூர் பகுதியில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்யும் மோகன்.C.லாசரஸ் என்ற பாதிரியின் பிரசாரக் கூட்டம் இத்தகைய வேலையை அப்பாதிரியின் உத்தரவின் பேரில் வழங்கியுள்ளது.
இந்துமுன்னணி மானிலத்த தலைவர் திரு. V. P. ஜெயகுமார் தலைமையில் இது பற்றி ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து நாளை (20.09.14) அன்று இந்துமுன்னணி இயக்கத்தின் சார்பில் மாபெரு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
கிறித்தவ பாதிரிகளின் அட்டூழிய, அநியாயங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுவருவதையும், அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையையும், அரசையும் இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை கேவலப்படுத்துகின்றவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை பெற்றுத் தரவேண்டுமென கேட்டுக்கொள்கிறது.