Daily Archives: January 28, 2016

கோவை கோட்ட “இந்து விழிப்புணர்வு” 8 வது மாநாடு – சத்தியமங்கலம்

26.01.16
சத்தியமங்கலத்தில் கோவை கோட்டத்தின் 8 வது  “இந்து விழிப்புணர்வு மாநாடு”  நடைபெற்றது.  சமீபகாலமாக இந்துக்களின் இதய சிம்மாசனத்தில் இந்துமுன்னணி அமர்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக காவிப்படை வீரர்களின் எண்ணிக்கை 20000 க்கும் அதிகமான அளவில் இருந்தது.

செங்கொடி கோலோச்சிய கொங்கு மண்டலம் காவியின் கோட்டையாக மாறிவிட்டது. சத்தியமங்கலம் நகரமே ஸ்தம்பித்தது.  1200 க்கும் மேற்பட்ட பேருந்து,  வேன்களில் சாரி,சாரியாக வந்த கூட்டத்தோடு கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களும் ஏராளம்.

ஒவ்வொரு  ஜனவரி 26 ம் தேதியும் குடியரசு தினத்தன்று கோவை மாநாடு நடைபெறுகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு எட்டாவது மாநாடு சத்தியமங்கலத்தில் நடந்தது. 

இந்துமுன்னணி நிறுவன  அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்கள் கலந்து கொண்டார்.

பெரியார் பிறந்த மண்ணில் (தமிழகத்தில் ) இந்துத்துவா நுழையாது என்று  கூறியவர்களுக்கு சாவுமணி  அடிக்கும் விதமாக பெரியார் பிறந்த மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தமிழர்கள் என்றும் ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் எஎன்பதும்,  தேசபக்தர்கள் என்பதும்  ஊர்ஜிதமானது.

மதமாற்றம் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது,  அதை தடுக்க நமது பணி விரிவடைய வேண்டும்.  “வீடு தோறும் இந்து முன்னணி;  வீதி தோறும் கிளைக்கமிட்டி” என்ற மகத்தான  இலக்கை நோக்கி வெற்றி நடை போடுவோம்.

இந்துமுன்னணி கொடி ஒரு கிராமத்தில் பறக்கிறது என்றால், அங்கு மதமாற்றம் செய்ய எவரும் வரமுடியாது.

இழந்த நிலப்பரப்பை மீட்போம்,
இழந்த மக்கள் தொகையை மீட்போம்,
இழந்த கோவில்களை மீட்போம்
இருக்கின்ற கோவில்களை பராமரிப்போம்
இந்த நாடு இந்து நாடு என்று அறிவிக்க வைப்போம்
       – என்ற வீரத்துறவி அதை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும் என்று கூறினார்.

மாநாட்டின் சிறப்பம்சமாக
வீரத்துறவியின் கரங்களால் இந்துமுன்னணி ஆண்டிராய்ட் ஆப் வெளியீடு நிகழ்ந்தது.
லவ் ஜிகாத் தடுப்பு நடவடிக்கையாக பேஸ்புக் பேஜ் ” இந்து பெண்கள் பாதுகாப்பு மையம் ” என்ற பெயரில் துவக்கப்பட்டது.
நிகழ்ச்சி முழுவதும் யூ டியூபில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது

1. ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
2. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்
3. திடீர் திடீரென்று உருவாகும் சர்ச்,  ஜெப கூடங்களை தடை செய்ய வேண்டும்
4. ஐ.எஸ். ஐ. எஸ் பயங்கரவாதத்தை ஒடுக்க அரசுடன் மக்கள்  இணைந்து எதிர்க்கவேண்டும்
5. தேர்தலின் மாண்பைக் காக்க மக்கள் ஓட்டுப் போட பணம் வாங்கக்கூடாது

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இந்துமுன்னணி மாநில பொதுசெயலாளர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி அஅவர்கள் தலைமையில்  மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச்செயலாளர் திரு. நா.முருகானந்தம், மாநில செயலாளர்கள், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

image

image

image

image

image

image

image

image

image

image

image

சேலம் கோட்ட மாநாடு

கடந்த 24 ம் தேதி சேலம் நகர் போஸ் மைதானத்தில் இந்துமுன்னணி பேரியக்கததின்  சேலம் கோட்ட  முதல் மாநாடு நடைபெற்றது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் , ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த  இந்துமுன்னணி  ஊழியர்கள் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர்.

சேலத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த  முதல் மாநாடு  அனைவர் மனதிலும் நீங்காத இடம் பெற்றது.

தமிழ், தமிழ் மக்கள் என்று தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வகையில் “யார் தமிழன் ” என்ற தலைப்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1970 களில் விநாயகர் திருவுருவத்தை உடைத்தும்,  ராமருக்கு செருப்பு மாலை அணிவித்தும் நடைபெற்ற அராஜகங்களை  ஆன்மீக பூமியான தமிழகத்தில் நிகழ்ந்தன.  1980 க்கு பிறகு நிலைமை மாறிவிட்டது.

தமிழகத்தில்  இ. மு ; இ.பி என்ற காலக் கணக்கீடு உள்ளது. அதாவது இந்துமுன்னணிக்கு முன்னால், இந்துமுன்னணிக்கு பின்னால் என்று, அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த சேலம் கோட்ட மாநாடு திகழ்ந்தது.

மத மாற்றத்தின் அபாயம்,  இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்வுகள்,  திராவிட இயக்கங்கள் மற்றும்  அரசியல் கட்சிகளின்  இந்து விரோத போக்கு,  நக்ஸல் பயங்கரவாதத்தின் நிலை என்று பல முக்கிய விஷயங்கள் மாநாட்டில் பேசப்பட்டது.

மாநில பொதுச்செயலாளர் திரு. காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் மாநில அமைப்பாளர் பக்தன்,  மாநில பொதுச்செயலாளர் திரு. நா.முருகானந்தம் , மாநில செயலாளர்கள்,  மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில,  மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பரதநாட்டிய கலை நிகழ்சிகளுடன் மாநாடு துவங்கி  தேசிய கீதத்துடன்  நிறைவு பெற்றது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. அரசே ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்
2.  துவக்கப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கு
3. கோவில் விழாக்களை தடை செய்யும் போக்கை நிறுத்து

image

image

image

image

image

image

தாணுலிங்க நாடார் நூற்றாண்டு நிறைவு விழா ரதயாத்திரைக்கு தடை

                     நீயும் உனது காவல் துறையும் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் இங்கிருந்து போய்விடு, இந்துக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பதுன்னு எனக்கு தெரியும் என முதலமைச்சர் எம் ஜி ஆரிடம் தில்லாக கை நீட்டி சொன்னது யார் ? எப்போது ? ஏன் தெரியுமா ?

மண்டைக்காடு கலவரம் நடந்தநேரத்தில்  முதலமைச்சராக இருந்தவர் எம் ஜி ஆர்…கலவரத்தை நிறுத்தும் விதமாக அவர்  சமாதான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக எந்த திட்டத்தையும் பற்றி எம்ஜிஆர் பேச தயாராக இல்லை. அப்போது அக்கினி பிழம்பாக கொதித்து போனார் இந்துக்களின் காவலர் அய்யா தாணுலிங்க நாடார் …

நான் முதலமைச்சர் என்றும் தெரிந்தும் இந்து மக்கள் பாதுகாப்புக்காக நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேராக என்னோட வாதிட்ட தாணுலிங்கம்  ,சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு ,மொழி எல்லை போரில் தலைமை தாங்கி.MPயாக ,
MLA வாக ,எதிர்கட்சி தலைவராக இருந்த மாவீரர்  என்பதை இப்போது அறிந்தேன் என்னுடன் மோதியது எனக்கு  இணையான தலைவரே  பெருமை  படுகிறேன் என்று தமிழக சட்டமன்றத்தில் பதிவுசெய்தவர் முதலமைச்சர் எம்ஜிஆர்.

பொதுமேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபொது  படியே  என்னை இறைவன் அழைக்கிறான் என்று சொல்லி உயிர் விட்டார் அய்யா தாணுலிங்க நாடார் (தன் இறப்பை தானேஅறிவித்தவர் ) .  புண்ணியம் செய்த உயிர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலோகம் செல்லும் என்றும் பெரியவர்கள் சொல்லுவர்கள்.
தன் இறுதி மூச்சு வரை இந்துக்களுக்காக் போராடியவர்.

அப்படி பட்ட மாவீரரின் நூற்றாண்டு நிறைவுவிழா ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது . அதற்கு எதிர்ப்பு தெரிவித்த  இந்து இயக்க தலைவர்களையும் 800 க்கும் மேற்பட்ட இந்துக்களையும் கைது செய்ததை கண்டித்து

இன்று 27/01/2016 புதன்கிழமை  மாலை 4.00 மணிக்கு
மாவட்ட ஆட்சியாளர்  அலுவலகம் , நாகா்கோவில்,
முன்பு வைத்து தமிழக அரசையும் தடை ஏற்படுத்திய  காவல்துறையையும் கண்டித்து சங்கபரிபார் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து இந்துமுன்னணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்துமுன்னணி முதல் மாநிலதலைவர் ஐயா.தாணுலிங்கநாடார்  கநாடார் நூற்றாண்டுநிறைவுவிழா  ரதயாத்திரை தடுத்துநிறுத்தி  800-யஅது மேற்பட்ட இந்து இயக்க தலைவர்களையும் பொதுமக்களையும் கைது செய்த காவல் துறையை கண்டித்து மாவட்ட அளவிலான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4மணிக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு வைத்து நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்தை விளக்கி இந்து இயக்க தலைவர்கள்  இந்துமுன்னணி மாவட்ட தலைவர் மிசா.சோமன் , மாநிலதலைவர் டாக்டர்.அரசுராஜா ஆகியோர் கண்டனஉரையாற்றினர்கள்.ஆர்பாட்டத்தில் 900-ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியாளரை  சந்தித்து மனு கொடுக்கபட்டது மனுவில்
1.திட்டமிட்டபடி ரதயாத்திரை நடத்துவோம்
2.ரதயாத்திரை தடுத்தால் அணைத்து ஒன்றியத்திலும் ஆர்ப்பாட்டம் ,மறியல்,அதையும் மீறி கைதாகவும் தயார் .
3.அதற்கும் ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் பந்த் நடைபெறும் என்று குறிப்பிடபட்டுள்ளது.

image