கோவை கோட்ட “இந்து விழிப்புணர்வு” 8 வது மாநாடு – சத்தியமங்கலம்

26.01.16
சத்தியமங்கலத்தில் கோவை கோட்டத்தின் 8 வது  “இந்து விழிப்புணர்வு மாநாடு”  நடைபெற்றது.  சமீபகாலமாக இந்துக்களின் இதய சிம்மாசனத்தில் இந்துமுன்னணி அமர்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக காவிப்படை வீரர்களின் எண்ணிக்கை 20000 க்கும் அதிகமான அளவில் இருந்தது.

செங்கொடி கோலோச்சிய கொங்கு மண்டலம் காவியின் கோட்டையாக மாறிவிட்டது. சத்தியமங்கலம் நகரமே ஸ்தம்பித்தது.  1200 க்கும் மேற்பட்ட பேருந்து,  வேன்களில் சாரி,சாரியாக வந்த கூட்டத்தோடு கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களும் ஏராளம்.

ஒவ்வொரு  ஜனவரி 26 ம் தேதியும் குடியரசு தினத்தன்று கோவை மாநாடு நடைபெறுகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு எட்டாவது மாநாடு சத்தியமங்கலத்தில் நடந்தது. 

இந்துமுன்னணி நிறுவன  அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்கள் கலந்து கொண்டார்.

பெரியார் பிறந்த மண்ணில் (தமிழகத்தில் ) இந்துத்துவா நுழையாது என்று  கூறியவர்களுக்கு சாவுமணி  அடிக்கும் விதமாக பெரியார் பிறந்த மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தமிழர்கள் என்றும் ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் எஎன்பதும்,  தேசபக்தர்கள் என்பதும்  ஊர்ஜிதமானது.

மதமாற்றம் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது,  அதை தடுக்க நமது பணி விரிவடைய வேண்டும்.  “வீடு தோறும் இந்து முன்னணி;  வீதி தோறும் கிளைக்கமிட்டி” என்ற மகத்தான  இலக்கை நோக்கி வெற்றி நடை போடுவோம்.

இந்துமுன்னணி கொடி ஒரு கிராமத்தில் பறக்கிறது என்றால், அங்கு மதமாற்றம் செய்ய எவரும் வரமுடியாது.

இழந்த நிலப்பரப்பை மீட்போம்,
இழந்த மக்கள் தொகையை மீட்போம்,
இழந்த கோவில்களை மீட்போம்
இருக்கின்ற கோவில்களை பராமரிப்போம்
இந்த நாடு இந்து நாடு என்று அறிவிக்க வைப்போம்
       – என்ற வீரத்துறவி அதை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும் என்று கூறினார்.

மாநாட்டின் சிறப்பம்சமாக
வீரத்துறவியின் கரங்களால் இந்துமுன்னணி ஆண்டிராய்ட் ஆப் வெளியீடு நிகழ்ந்தது.
லவ் ஜிகாத் தடுப்பு நடவடிக்கையாக பேஸ்புக் பேஜ் ” இந்து பெண்கள் பாதுகாப்பு மையம் ” என்ற பெயரில் துவக்கப்பட்டது.
நிகழ்ச்சி முழுவதும் யூ டியூபில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது

1. ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
2. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்
3. திடீர் திடீரென்று உருவாகும் சர்ச்,  ஜெப கூடங்களை தடை செய்ய வேண்டும்
4. ஐ.எஸ். ஐ. எஸ் பயங்கரவாதத்தை ஒடுக்க அரசுடன் மக்கள்  இணைந்து எதிர்க்கவேண்டும்
5. தேர்தலின் மாண்பைக் காக்க மக்கள் ஓட்டுப் போட பணம் வாங்கக்கூடாது

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இந்துமுன்னணி மாநில பொதுசெயலாளர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி அஅவர்கள் தலைமையில்  மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச்செயலாளர் திரு. நா.முருகானந்தம், மாநில செயலாளர்கள், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

image

image

image

image

image

image

image

image

image

image

image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *