திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் கேள்வி??

இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக பரவிவரும் சூழ்நிலையில் நேற்று (08/04/2020) நம் பாரத பிரதமர் அவர்கள் அனைத்து எதிர் கட்சி தலைவர்களுடனும் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அதில் திமுக கட்சி சார்பாக பங்கேற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்கள் பங்கேற்றார்.

அப்போது பிரதமரிடம் அவர், சிலர் கொரோனா நோய் தொற்றை மதச்சாயம் பூசுவதாகவும் தாங்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இந்த கருத்தை இந்து முன்னணி பேரியக்கம் வரவேற்கிறது.

அதேசமயம் வங்காளதேசத்தில் இருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்குள் வந்த 11 நபர்கள்
[அவர்களின் பெயர் விபரங்கள்: ஏ. கம்ரன் இஸ்லாம்.(19),ஏ. தன்வீர் ரெய்ஹாகான் (26),எஸ் .மனீர்ஹாசன்(19),ஏ. சுலைமான்(36).,கே. அப்துல் ஹாலீக்(59)., ஹெச். கமால்பப்ரீ(32).,சோ. அப்துர் ரசாக்(62)., எஸ். மொக்தர் அலி(59).,
ஓ .ரபியுல் ஹாசி(26)., ஏ.சம்சுல்லாஹ்(66)., ஷபின் மத் மத்(43),]

டெல்லி தப்லிக் மத மாநாட்டில் கலந்துகொண்டு அதன் பின்னர் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் அடியானூத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் அந்தப் பதினொரு பெயரையும் கைது செய்து விதியை மீறி மதப்பிரச்சாரம் செய்தல் கொரோனா வைரசை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதித்துறையின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின்பேரில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ஏன் திண்டுக்கல் வந்தனர்? வங்காளதேசத்தில் இருப்பவர்களுக்கும் திண்டுக்கல்லில் இருப்பவர்களுடன் என்ன தொடர்பு?? அந்தத் தொடர்பு உள்ள நபர்களை காவல்துறை கைது செய்ய வேண்டாமா?? தமிழக அரசு இந்த விசயத்தில் மென்மையான போக்கை கையாண்டு வந்தால் பல உயிர் பலிகள் ஏற்படும் அல்லவா??

மதச்சார்பின்மை மீது பெரும் அக்கறை உள்ள திமுக முன்னாள் அமைச்சர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்திய நாட்டின் மீதும் தமிழகத்தின் மீதும் பெரிதும் அக்கறை இருந்தால் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களை தாங்களாகவே முன் வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்த பயப்படுவது ஏன்??

இஸ்லாமியர்கள் மீது பெரிதும் அக்கறையோடு அவர்கள் நடத்தும் அனைத்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளும் ஒரு கட்சி உங்களுடைய திமுக கட்சி, அவ்வாறு இருக்கையில் உங்களுடைய கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இதனை உங்களால் வலியுறுத்தி பேச முடியுமா??

அவ்வாறு தங்களால் சொல்ல முடியவில்லை எனில் இதில் மதரீதியாக செயல்படுவது நீங்கள்தான் என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வீர்களா?? அதை ஒத்துக் கொள்ளும் துணிச்சலாவது உங்களுக்கும் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கிறதா??

என்றும் தாயக பணியில்

V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி.
9486482380

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *