Tag Archives: பதிலுக்கு பதில்

கிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகளை எதிர்த்து போராடும் ஒரு சமுதாயம் – மாநிலத் தலைவர் நேரில் சென்று சந்தித்தார்

இந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

ஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.

இந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட்டது…

இராம.கோபாலன் அறிக்கை-பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
15-2-2019
பத்திரிகை அறிக்கை
தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். 42 வீரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது!
காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு வெடி மருந்து நிரப்பிய வாகனத்தின் மூலம், அந்த வழியாக சென்ற சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 42 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். .
இந்த தாக்குதலுக்குக் காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நமது இராணுவத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இது, பாரத தேசத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பயங்கரவாதம் என்றும் நன்மை செய்யாது. மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உதவியில்லாமல் இத்தகைதொரு சதி செயலை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செய்திருக்க முடியாது. எனவே, உலக நாடுகள், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் முன் வரவேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் கூட பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்படாதவண்ணம், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை அமைய வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும், அதற்கு ஆதரவு தருவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்து முன்னணி, தமிழக முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தினை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேசமயம் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் இந்திய அரசு, இராணுவ நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)