Tag Archives: #திருமாவளவன்

இந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

23.10.2020

கடந்த 16.10.2020 அன்று பெரியார் tv என்ற யூ ட்யூப் சானலில் காணொளி வெளியானது . அதில் 26.09.2020 அன்று வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு காணொளி மூலம் பெரியாரிய தேசவிரோத அமைப்புகள் மூலமாக நடைபெற்ற பெரியாரும் இந்திய அரசியலும் என்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன் இந்து மதத்தினுடைய மனுதர்மத்தில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று கூறப்பட்டுள்ளதாக பேசியுள்ளார்.

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கில் ஆங்கிலத்திலும், தமிழிலும் இந்து பெண்களை விபச்சாரிகள் என்று அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு கூறியுள்ளார். இந்த செயல் இந்துக்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தொடர்ந்து இந்து தர்மத்தை, இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கின்றார். பிற மதங்களைப் பற்றி எவ்வித கருத்தையும், எப்போதும் இவர் சொன்னது கிடையாது. அப்படியெனில் இவர் யாரோ ஒரு சிலரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே இவ்வாறு பேசுகிறார் என்பது உறுதியாகிறது. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

இதே போல ஒரு தொடர்ந்து பேசி வருவதை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் கண்டிக்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுடன் யாரும் கூட்டணி வைக்க கூடாது. அப்படி கூட்டணி வைப்பவர்களுக்கு எதிராக இந்துக்கள் வாக்களிக்க வேண்டும் .

அதேபோல இவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி ஏற்கும் பொழுது பதவிப்பிரமாணம் செய்து கொண்டபடி நடந்து கொள்ளவில்லை. இந்து மதத்தின் மீது மிகப் பெரும் வெறுப்பை காண்பிக்கிறார். அதனால் அரசியல் சாசனப்படி இவருடைய நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க இவருக்கு அருகதை இல்லை.எனவே இவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேதகு ஜனாதிபதி அவர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
.

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..!

கடந்த 50 ஆண்டுகளூக்கு
மேலாக இந்துமத கடவுள்களை இழிவுபடுத்துவோர் தங்குதடையின்றி அரசியலில் வெற்றிகளை பெற்று வந்தது , இந்துமத உணர்வாளர்களின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்தி வந்தது.

இந்துமத பாதுகாப்பிற்காக வாக்களிப்போர் என ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரை உருவாக்க வேண்டும் அப்போது மட்டுமே இந்துக்களுக்கு மரியாதை, பாதுகாப்பு இதெல்லாம் சாத்தியமாகும் என இந்துமத பெரியவர்கள் ஆதங்கப்பட்டனர்.

இன்று அது சாத்தியமாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

சபரிமலை நம்பிக்கையை இழிவு படுத்தியது, ஸ்ரீகிருஷ்ணரை கேவலமாகப் பேசியது,
ஸ்டாலின் கனிமொழியின் இந்து மத வெறுப்பு என இந்துக்கள் எதையும் மறக்கவில்லை.

கனிசமான இந்துக்கள் இந்த முறை இந்துமத எதிர்ப்பு கூட்டணியான திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்பதை களநிலவரம் உணர்த்துகிறது.

நான் இந்து மதத்திற்கு எதிரானவன்அல்ல என்று தற்போது ஸ்டாலின் கதறுகிறார்.

திருமாவளவனோ எனது சொந்த செலவில் சிவாலயம் கட்டி வருவதாக கூறுகிறார்.

கனிமொழியோ நெற்றியிலே குங்குமத்தோடு வாக்கு சேகரிக்கிறார்..

இதெல்லாம் தேர்தல் ஏமாற்று வேலை என்றாலும் இந்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இவர்கள் உணர்ந்துள்ளதால் இந்த மாற்றம் வந்துள்ளது.

வெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் கனிசமான எண்ணிக்கையில் இந்துஉணர்வோடு வாக்களிக்க இருப்பது புதிய மாற்றம் ஆகும்..

இந்த மாற்றத்தை ஏற்படுத்த கடந்த
39ஆண்டுகளாக இந்துமுன்னணி தொடந்து போராடி வந்துள்ளது. தற்போது அது சாத்தியமாகி இருக்கிறது…!

ஜெய் ஹிந்த்..!
பாரத் மாதா கி ஜெய்..!

ஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.
சனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.
மூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா?
அதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.
வர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன? யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.
அதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.
உண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.
குழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.

திருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.
இவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.
இந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.
ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன்

பத்திரிகை அறிக்கை

திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..

6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

திருமாவளவன், தான் இந்துவா ? இல்லையா? என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.

இந்து கோயில்களை இடித்து புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா? அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா? அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா? ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன.

இப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்நாட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா?

எப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச்சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்.

திருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார்? என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

8-12-2017