கடந்த 24 ம் தேதி சேலம் நகர் போஸ் மைதானத்தில் இந்துமுன்னணி பேரியக்கததின் சேலம் கோட்ட முதல் மாநாடு நடைபெற்றது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் , ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இந்துமுன்னணி ஊழியர்கள் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர்.
சேலத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த முதல் மாநாடு அனைவர் மனதிலும் நீங்காத இடம் பெற்றது.
தமிழ், தமிழ் மக்கள் என்று தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வகையில் “யார் தமிழன் ” என்ற தலைப்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1970 களில் விநாயகர் திருவுருவத்தை உடைத்தும், ராமருக்கு செருப்பு மாலை அணிவித்தும் நடைபெற்ற அராஜகங்களை ஆன்மீக பூமியான தமிழகத்தில் நிகழ்ந்தன. 1980 க்கு பிறகு நிலைமை மாறிவிட்டது.
தமிழகத்தில் இ. மு ; இ.பி என்ற காலக் கணக்கீடு உள்ளது. அதாவது இந்துமுன்னணிக்கு முன்னால், இந்துமுன்னணிக்கு பின்னால் என்று, அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த சேலம் கோட்ட மாநாடு திகழ்ந்தது.
மத மாற்றத்தின் அபாயம், இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்வுகள், திராவிட இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் இந்து விரோத போக்கு, நக்ஸல் பயங்கரவாதத்தின் நிலை என்று பல முக்கிய விஷயங்கள் மாநாட்டில் பேசப்பட்டது.
மாநில பொதுச்செயலாளர் திரு. காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச்செயலாளர் திரு. நா.முருகானந்தம் , மாநில செயலாளர்கள், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பரதநாட்டிய கலை நிகழ்சிகளுடன் மாநாடு துவங்கி தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. அரசே ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்
2. துவக்கப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கு
3. கோவில் விழாக்களை தடை செய்யும் போக்கை நிறுத்து