நீயும் உனது காவல் துறையும் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் இங்கிருந்து போய்விடு, இந்துக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பதுன்னு எனக்கு தெரியும் என முதலமைச்சர் எம் ஜி ஆரிடம் தில்லாக கை நீட்டி சொன்னது யார் ? எப்போது ? ஏன் தெரியுமா ?
மண்டைக்காடு கலவரம் நடந்தநேரத்தில் முதலமைச்சராக இருந்தவர் எம் ஜி ஆர்…கலவரத்தை நிறுத்தும் விதமாக அவர் சமாதான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக எந்த திட்டத்தையும் பற்றி எம்ஜிஆர் பேச தயாராக இல்லை. அப்போது அக்கினி பிழம்பாக கொதித்து போனார் இந்துக்களின் காவலர் அய்யா தாணுலிங்க நாடார் …
நான் முதலமைச்சர் என்றும் தெரிந்தும் இந்து மக்கள் பாதுகாப்புக்காக நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேராக என்னோட வாதிட்ட தாணுலிங்கம் ,சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு ,மொழி எல்லை போரில் தலைமை தாங்கி.MPயாக ,
MLA வாக ,எதிர்கட்சி தலைவராக இருந்த மாவீரர் என்பதை இப்போது அறிந்தேன் என்னுடன் மோதியது எனக்கு இணையான தலைவரே பெருமை படுகிறேன் என்று தமிழக சட்டமன்றத்தில் பதிவுசெய்தவர் முதலமைச்சர் எம்ஜிஆர்.
பொதுமேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபொது படியே என்னை இறைவன் அழைக்கிறான் என்று சொல்லி உயிர் விட்டார் அய்யா தாணுலிங்க நாடார் (தன் இறப்பை தானேஅறிவித்தவர் ) . புண்ணியம் செய்த உயிர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலோகம் செல்லும் என்றும் பெரியவர்கள் சொல்லுவர்கள்.
தன் இறுதி மூச்சு வரை இந்துக்களுக்காக் போராடியவர்.
அப்படி பட்ட மாவீரரின் நூற்றாண்டு நிறைவுவிழா ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது . அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து இயக்க தலைவர்களையும் 800 க்கும் மேற்பட்ட இந்துக்களையும் கைது செய்ததை கண்டித்து
இன்று 27/01/2016 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் , நாகா்கோவில்,
முன்பு வைத்து தமிழக அரசையும் தடை ஏற்படுத்திய காவல்துறையையும் கண்டித்து சங்கபரிபார் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து இந்துமுன்னணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்துமுன்னணி முதல் மாநிலதலைவர் ஐயா.தாணுலிங்கநாடார் கநாடார் நூற்றாண்டுநிறைவுவிழா ரதயாத்திரை தடுத்துநிறுத்தி 800-யஅது மேற்பட்ட இந்து இயக்க தலைவர்களையும் பொதுமக்களையும் கைது செய்த காவல் துறையை கண்டித்து மாவட்ட அளவிலான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4மணிக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு வைத்து நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்தை விளக்கி இந்து இயக்க தலைவர்கள் இந்துமுன்னணி மாவட்ட தலைவர் மிசா.சோமன் , மாநிலதலைவர் டாக்டர்.அரசுராஜா ஆகியோர் கண்டனஉரையாற்றினர்கள்.ஆர்பாட்டத்தில் 900-ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து மனு கொடுக்கபட்டது மனுவில்
1.திட்டமிட்டபடி ரதயாத்திரை நடத்துவோம்
2.ரதயாத்திரை தடுத்தால் அணைத்து ஒன்றியத்திலும் ஆர்ப்பாட்டம் ,மறியல்,அதையும் மீறி கைதாகவும் தயார் .
3.அதற்கும் ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் பந்த் நடைபெறும் என்று குறிப்பிடபட்டுள்ளது.
Super