தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளினால் நலிவடைந்துள்ள சிறு-குறு தொழில்சாலைகள் (MSME) மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர் வேலைவாய்ப்பு பற்றி அரசு விவேகத்துடன் செயல்படவேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி. சுப்பிரமணியம் அறிக்கை

ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் திரு.அந்தோனியோ குத்தரேசு ஒரு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் உற்பத்தியை நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்தால் பட்டினிச் சாவுகள் ஏற்படும், நாட்டில் கலவரங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

நமது இந்திய நாட்டில் ஊரடங்கு சமயத்தில் விவசாயம் சார்ந்தவைகளுக்கு கட்டுபாடுகள் இல்லாது விலக்கு அளித்திருப்பது பாராட்டத்தக்கது. இருப்பினும் பல்வேறு தொழில்களும், தொழிலாளர்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகம் புதிய யுக்தியைக் கையாளுவது அவசியம்.

கொரோனா பாதித்த பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவான பகுதிகள் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து தனித்தனியான திட்டங்களை வகுக்கவேண்டும்.

அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கொடுப்பது என்பதை திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும்.

உதாரணமாக பழுது பார்க்கும் கடைகள் நோய்த் தடுப்பு கட்டுபாடுகளை கடைப்பிடித்து இயங்க அனுமதி அளிக்கவேண்டும்.

சிறு-குறு தொழில் (உற்பத்தி) நிறுவனங்கள் முதலில் செயல்படத் துவங்கினால்தான் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட MSME துறைகள் முதலில் களமிறங்க வேண்டும்.

உற்பத்தி தொடர்ந்து நடைபெற அனைத்து விதமான வழிகளையும் ஆய்ந்து விவேகத்துடன் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை இந்துமுன்னணி கோருகிறது.

அதே சமயம் இந்த பேரிடர் காலத்தை பயன்படுத்தி மக்களை திசை திருப்பி, குறுகிய நோக்கத்துடன் சுயலாபத்திற்காக அரசுக்கு எதிராகவும், கலவரத்தை ஏற்படுத்தவும் ஒரு சிலர் திட்டமிட்டுலாதாகத் தெரிகிறது. அத்தகையவர்களை முதலிலேயே கண்டறிந்து கில்லி எரிய அரசு கவனாமாக செயல்படவேண்டும் என இந்து முன்னனி வேண்டுகோள் விடுக்கிறது.
தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *