ஏர்வாடி – பாகிஸ்தானா ??
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஏர்வாடியில் உள்ள LNS புரம் என்ற இடத்தில் வைத்த விநாயகர் சிலையை முஸ்லிம்களின் மிரட்டலுக்கு பயந்து நாங்குநேரி DSP அவர்கள் கோவிலுக்குள் ஷீ (செறுப்பு) காலுடன் சென்று விநாயகர் சிலையை அகற்றினார்.
மேற்படி அதிகாரியின் இச்செயல் இந்து க்களின் மனதை புண் படுத்தும் விதமாகவும் இந்து தெய்வத்தை இழிவு படுத்தும் விதமாக உள்ளது மேற்படி அதிகாரியை கண்டிக்கும் வகையில் மாலை முதல் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனை அடுத்து நமது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.
ஆயினும் விநாயகர் திருமேனியை திரும்பத் தரும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என மக்கள் முடிவெடுத்தனர்.
இதனை தொடர்ந்து ஏர்வாடி உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் டாக்டர் .அரசுராஜா அவர்கள் நேரில் வந்து அப்பகுதி மக்களிடம் ஆலோசனை நடத்தினார்.
மக்கள் நாங்கள் எங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ள மாட்டோம் என உறுதி அளித்தனர்.
போராட்டம் தொடர்வதால் பதட்டம் நீடிக்கிறது.