இந்துமுன்னணி மாநிலத் தலைவராக காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்

ஈரோடு மாநகரில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 14 மாவட்டங்களுக்கான மண்டலப் பொதுக்குழு நடைபெற்றது.

14 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த நகர, ஒன்றிய , மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 684 பேர் கலந்து கொண்டனர்.
நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி திரு. ராம.கோபாலன் அவர்களின் வழிகாட்டுதலில் , மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச் செயலாளர்கள் திரு. நா.முருகானந்தம் , திரு. சி.சுப்ரமணியம் , மாநிலச் செயலாளர்கள் திரு. கிஷோர்குமார், தாமு வெங்கடேஸ்வரன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் , திரு.செந்தில்குமார் ஆகிய மாநில  பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய வீரத்துறவி இந்துமுன்னணி மாநிலத் தலைவராக திரு.காடேஸ்வரா  சுப்பிரமணியம் அவர்கள் இனி பணியாற்றுவார் என அறிவித்தார்.
பொறுப்பேற்ற திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள்  , தாணுலிங்க நாடார் ஐயா வகித்த பொறுப்பு இது  அந்த வகையில் இதன் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவேன் எனக் கூறினார்.
cs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *