தனித்திரு! விழித்திரு!!
வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்”
கொரோனா தடுப்பு –மக்கள் உதவி மையம்_- இந்துமுன்னணி
மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை
தினசரி அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு வருகின்றனர். மார்க்கெட் மளிகை மருந்து போன்ற கடைகளில் கூட்டம் கூடுவதால் கொரானா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.
இந்த முக்கியமான பிரச்சனையை கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் வீடு தேடி கொண்டு போய் சேர்க்கும் “தனித்திரு! விழித்திரு!! வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்” என்ற சேவையை தமிழகம் முழுவதிலும் செய்ய இந்து முன்னணி முடிவு செய்திருக்கிறது.
மாநில தலைமை உதவி மையம் சென்னையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டு அந்த அலுவலகத்தின் அலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும்.
அந்த எண்ணை தொடர்பு கொண்டு தாங்கள் எந்தப் பகுதியில் இருக்கிறோம் தங்களுக்கு என்ன பொருள் தேவை என்பதை தெரிவித்தால் அலுவலக பொறுப்பாளர்கள் அந்தப் பகுதியில் உள்ள இந்து முன்னணி ஊழியர்கள்
மூலம் பொதுமக்களின் வீடு தேடிச் சென்று அந்த பொருட்களை உரிய நேரத்தில் பொதுமக்களிடம் கொடுப்பார்கள். பொருளுக்கான தொகையை பெற்றுக் கொள்வார்கள்.
இதனால் பொதுமக்கள் கடைகளில் சாலைகளில் பொது இடங்களில் கூறுவது தவிர்க்கப்பட்டு கொரானா பரவுவதை பெருமளவில்
முறியடிக்க முடியும்.