Tag Archives: #தடைஉத்தரவு

போலி ஆவணங்கள் தயார் செய்து 144 தடை உத்தரவை மீறிய இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் தலைமைச் செயலருக்கு கடிதம்

15/04/2020

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
தூத்துக்குடி.
9486482380

பெறுநர்
உயர்திரு தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
சென்னை
தமிழ்நாடு

ஐயா வணக்கம்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நேற்று அதிகாலை (14/04/2020) சென்னையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பஹிர்தின், அலிமுகமது, அப்துல் காதர் உட்பட 14 இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக விளாத்திகுளம் காமராஜர் நகர் சேக் உசேன் என்பவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.

புதூர் பகுதியில் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்கள் வந்த சொகுசு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 144 தடை உத்தரவை மீறி போலி ஆவணங்களை உபயோகித்து 14 பேர் விளாத்திகுளம் பகுதிக்கு வந்தது தெரியவந்தது.

உடனடியாக தகவல் கிடைக்கப் பெற்று தாசில்தார் ராஜ் குமார் அவர்கள் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 14 பேரையும் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு விளாத்திகுளத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அரசை ஏமாற்றிய மேற்படி 14 நபர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வாகன ஓட்டுனர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்?

செங்கல்பட்டு மறைமலைநகர் பகுதியில் இருந்து விளாத்திகுளம் வரை செல்வதற்கான அரசு முத்திரையுடன் கூடிய (Transit permit for public sl.no 1076) போலி ஆவணங்கள் தயார் செய்த அப்துல் காதர் என்பவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்?

செங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் பகுதி வரை (ஏறக்குறைய 500 கி.மீ) 144 தடையை மீறி பல மாவட்டங்களை கடந்து வர வேண்டிய சூழ்நிலையில் அத்தனை மாவட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடிகள் இருந்தும் எப்படி அவர்களால் அதைக் கடந்திருக்க முடிந்தது?

சட்டத்தை மீறுபவர்கள் சிறுபான்மையின மக்களாக இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று யாரும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்களா? என்ற ஐயம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.

போலி ஆவணங்கள் தயார் செய்தது அவர்கள் ஒரு ஆதார் எண்ணையும் (8033 3785 4457) குறிப்பிட்டுள்ளார்கள். அந்த ஆதார் எண் உண்மையானதா என்று விசாரணை நடத்த வேண்டும்.

நேற்று முன்தினம் முசிறி அருகே டில்லி மாநாட்டிற்கு சென்றுவந்த ஒரு இஸ்லாமியர் போலியாக ஓரு இந்துவின் ஆதார் எண்ணை உபயோகப்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் போலி ஆவணத்தில் அரசு முத்திரையை (rubber stamp) பயன்படுத்தியிருக்கிறார்கள். லாக் டவுனில் (lockdown) அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் அவர்களால் இதற்காக எப்படி அதை தயார் செய்து இருக்க முடியும்?

இவர்கள் இந்த அரசு ரப்பர் ஸ்டாம்பை (Rubber stamp) தயார் செய்யும் மோசடியிலும் ஈடுபட்டு இருக்கலாமோ என்ற ஐயமும் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

மக்களின் இந்த ஐயங்களை போக்கி விரைந்து அந்த 14 நபர்கள் மீதும் தகுந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

தாயகப் பணியில்

V.P.ஜெயக்குமார்
15/04/2020
பரமன்குறிச்சி

நகல்
1) உயர்திரு தமிழக DGP அவர்கள்
2) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள்
3) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்