விநாயகர் சதுர்த்தி விழா- 2014-மதமாற்றத்தை தடுத்திடுவோம்.,

 

மதம் மாறுவது அவமானம்: தாய்மதம் திரும்புவது தன்மானம்

  • தனி மனிதன் மதம் மாறுவதால்

o   தனது அடையாளத்தை இழக்கிறான்.

o   தனது சொந்த பந்தங்கள், குடும்ப, பாரம்பரிய உறவுகள் கெட்டு குழப்பம் ஏற்படுகிறது.

o   தமிழன் என்ற அடையாளத்தை இழக்கிறான். மொழி மாறுகிறது, கலாச்சாரம், பண்பாடு மாறுகிறது.

o   தனி மனித சுதந்திரம் பறிபோய் தன் சொந்த முடிவை எடுக்கமுடியாமல் திருச்சபைகளுக்கு கட்டுப்பாடு என்ற பெயரில் அடிமையாகிறான்.

  • மதமாற்றம் நடந்த பகுதிகளில் இந்நாட்டின் மீதான பக்தி குறைந்து, பயங்கரவாதம் பரவுகிறது. (உம் காஷ்மீர்,,நாகலாந்து, மணிப்பூர், மிசோரம்)
  • தன தாய் மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறுவது பெற்ற தாயை விற்பதற்கு சமம்.
  • தைப் பொங்கல், தீபாவளி போன்ற நம் நாட்டின் தேசியப் பண்டிகைகள் புறக்கணிக்கப்பட்டு ஐரோப்பாவின் நல்ல வெள்ளி, கிறிஸ்துமஸ் மட்டுமே கொண்டாடுகிறான்.
  • இந்த நாட்டின் புனித நூலான திருக்குறள்,ஆத்திசூடி போன்ற நூல்கள் தூக்கி எறியப்பட்டு பைபிள் மட்டுமே வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறான்.
  • ஒருவன் மதம் மாறுவதால் நம் எண்ணிக்கை ஒன்று குறைவது மட்டுமல்ல, எதிரியின் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது-சுவாமி விவேகானந்தர்.

 

மதமாற்றத்தை தடுத்திடுவோம்.,

பண்பாடு, கலாச்சாரம், தாய்நாட்டைக் காத்திடுவோம்

மனித சங்கிலி போராட்டம் -கோவை

கோவை மாநகரில் புதிதாக கட்டப்பட உள்ள மேம்பாலப் பணிக்காக, பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவில் உட்பட பல கோவில்களை அகற்ற உள்ளதை கண்டித்து இந்துமுன்னணி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் manitha sangili

திருப்பூர்- வடமாநில இந்துக்கள் ஒன்றிணைவு விழா ( uththar baarathiya ektha milan samaroh)

திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வட மாநிலத்தை சேர்ந்த, தொழில் நிமித்தமாக வந்திருந்து குடியேறி தமிழகவாசிகளாகவே ஆகிப்போன வட இந்திய இந்து  சகோதரர்கள் இந்து முன்னணி பேரியக்கத்தில் இணைந்து சமுதாயப்பணி ஆற்ற உள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி நடைபெறவுள்ள பெரும் விழாவில் அவர்கள் இந்துமுன்னணியில் இணைகின்றனர்.

இந்த விழாவிற்கு இந்துமுன்னணி மாநிலத் பொதுசெயலாளர் திரு.காடேஸ்வர சுப்ரமணியம் அவர்கள், மாநில அமைப்பாளர் திரு. நா. முருகானந்தம் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.

வட மாநில இந்துக்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. வித்யா பூஷன் சிங் தலைமையில் ஆயிரக்கணக்கானோர்  இந்துமுன்னணியில் இணைகின்றனர்.

மதம் மாறுவது அவமானம் – தாய் மதம் திரும்புவது தன்மானம் – விநாயகர் சதுர்த்தி விழா-ஆகஸ்ட் 29

தமிழகம் முழுதும் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி சுமார் 50,000 க்கும் மேற்ப்பட்ட விநாயகர் திரு உருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சுமார் 1000 இடங்களில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத காகிதக் கூழில்  தயாரிக்கப்பட்ட திருவுருவச் சிலைகள் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது.

தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வருகின்ற மதமாற்றம்  தடுத்து நிறுத்தப்பட வேண்டும், மதம்மாறியவர்களை தாய்மதம் திருப்பப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி இவ் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட இந்துமுன்னணி தீர்மானித்து உள்ளது.

இவ்விழாவில் அனைவரும் பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

திண்டுக்கல்லில் இந்துக்கள் மீது தாக்குதல்

திண்டுக்கல் நகர் தேனி ரோட்டில் உள்ள எருமைக்கார தெருவில் வசிக்கும் இந்துக்கள்,தங்கள் பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக விநாயகர் கோவிலை அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.ஓலை கீற்றுகளை மாற்றி புதிய கூரை அமைக்க 12.12.2014(சனிக்கிழமை) அங்குள்ள மக்கள் சென்றனர்.அப்போது அருகிலுள்ள பேகம்பூர் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அக்கோயில் உள்ள பகுதி தங்களுக்கு சொந்தமான இடம் என்று இந்துக்களிடம் தகராறு செய்தனர்.கோவிலின் பட்டா  உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கோவிலுக்கு சொந்தமானதாக இருக்க அதனை ஏற்க மறுத்த காவல்துறை கண்காணிப்பாளர் ,முஸ்லிம்களை விட்டு சிலையை அகற்ற அனுமதித்தார். எருமைக்கார வீதியின் தாய்மார்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் சிலையை எடுக்க ஆட்சேபித்து கோவிலை சுற்றி நின்றனர். அவர்களை அப்புறப்படுத்த பெண் போலீசாரை விட்டு தடியடி நடத்தி கைது செய்து AR காவல் துறையினர் தங்கும் இடத்தில் அவர்களை வைத்துள்ளனர்.மேலும் காவலர்கள் விநாயகர் சிலையை அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றுவிட்டனர்.தாய்மார்களை தாக்குவதை கண்டித்து தடுக்கப் போன நகர செயலாளர் திரு.சஞ்சீவிராஜ் அவர்களை ஆய்வாளர் ஜெயச்சந்திரன் அடித்து வேனில் ஏற்றினார்.இந்த பிரச்சினை நடக்குமிடத்திற்கு பத்திரிக்கையாளர்ளை அனுமத்திக்காது தடுத்துவிட்டனர் .இத்தகைய அராஜகத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்டங்களில் பதட்டம் நிலவுகிறது

மாநில பயிற்சி முகாம்கள் -2014

தமிழகத்தில் நமது பேரியக்கத்தின் சார்பில் இந்த ஆண்டு 3 இடங்களில் ஊழியர்களுக்கான ஆளுமை பண்புப் பயிற்சி (7 நாள்) முகாம்கள் நடைபெற்றன. தேனி முகாமில் 166 பேரும்., சென்னையில் 143 பேரும்., பொள்ளாச்சியில் 186 பேரும் கலந்துகொண்டனர். அனைத்து முகாம்களிலும் 2 நாட்கள் நிறுவன அமைப்பாளர் திரு.இராம.கோபாலன் ஜி இருந்து வழிகாட்டினார். மாநில அமைப்பாளர், இணை அமைப்பாளர்கள்,பொதுச் செயலாளர்கள்,உள்ளிட்ட மாநில , கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்றவர்கள் தங்களது பகுதிகளில் கமிட்டி அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவர். முகாம் பல நல்ல ஊழியர்களை உருவாக்கும் ஒரு பயிற்சி பட்டறை

அன்னையர் முன்னணி மாநில பயிற்சி முகாம்-2014

தமிழகத்தில் நமது பேரியக்கத்தின் சார்பில் இந்த ஆண்டு 3 இடங்களில் ஊழியர்களுக்கான ஆளுமை பண்புப் பயிற்சி (7 நாள்) முகாம்கள் நடைபெற்றன. தேனி முகாமில் 166 பேரும்., சென்னையில் 143 பேரும்., பொள்ளாச்சியில் 186 பேரும் கலந்துகொண்டனர். அனைத்து முகாம்களிலும் 2 நாட்கள் நிறுவன அமைப்பாளர் திரு.இராம.கோபாலன் ஜி இருந்து வழிகாட்டினார். மாநில அமைப்பாளர், இணை அமைப்பாளர்கள்,பொதுச் செயலாளர்கள்,உள்ளிட்ட மாநில , கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்றவர்கள் தங்களது பகுதிகளில் கமிட்டி அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவர். முகாம் பல நல்ல ஊழியர்களை உருவாக்கும் ஒரு பயிற்சி பட்டறை.