All posts by Admin

ஏர்வாடி பாகிஸ்தானா ?

ஏர்வாடி – பாகிஸ்தானா ??

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா    ஏர்வாடியில் உள்ள LNS புரம் என்ற இடத்தில் வைத்த விநாயகர் சிலையை முஸ்லிம்களின் மிரட்டலுக்கு பயந்து நாங்குநேரி DSP அவர்கள் கோவிலுக்குள் ஷீ (செறுப்பு) காலுடன் சென்று விநாயகர் சிலையை அகற்றினார்.

மேற்படி அதிகாரியின் இச்செயல் இந்து க்களின் மனதை புண் படுத்தும் விதமாகவும் இந்து தெய்வத்தை இழிவு படுத்தும் விதமாக உள்ளது மேற்படி அதிகாரியை கண்டிக்கும் வகையில் மாலை முதல் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிருப்பு  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து நமது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.

ஆயினும் விநாயகர் திருமேனியை திரும்பத் தரும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என மக்கள் முடிவெடுத்தனர்.

இதனை தொடர்ந்து ஏர்வாடி உள்ளிருப்பு  உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் டாக்டர் .அரசுராஜா அவர்கள் நேரில் வந்து அப்பகுதி மக்களிடம் ஆலோசனை நடத்தினார்.

மக்கள் நாங்கள் எங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ள மாட்டோம் என உறுதி அளித்தனர்.

போராட்டம் தொடர்வதால் பதட்டம் நீடிக்கிறது.

image

image

பத்திரிகை அறிக்கை – திப்பு சுல்தான் படம் அவமானம் – கோபால் ஜி

10.9.2015

பத்திரிகை அறிக்கை

திரைப்படத்துறையினருக்கு இந்து முன்னணியின் வேண்டுகோள்..

கன்னட தயாரிப்பாளர் எடுக்கும் திப்புசுல்தான் படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்களை நடிக்க வைக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தமிழர்களுக்கு செய்யும் அப்பட்டமான அவமானமாகும்.

தமிழ்நாட்டில் மதவெறி தாக்குதல் நடத்தியவன் திப்புசுல்தான். அதற்கு ஏராளமான ஆதாரங்களை திரட்டி புத்தகமாகவும் வெளியிட்டுள்ளோம். இஸ்லாமிய மதவெறியால் தமிழர்களை வேட்டையாடியவனை, சுதந்திர போராட்ட வீரனாக சித்தரிக்க நடக்கும் மேலும் ஒரு முயற்சி தான் இது.

தமிழக மக்கள் இன்றும் என்றும் நினைவில் வைத்துப் போற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது சுயசரிதையான `நான் ஏன் பிறந்தேன்?’ என்ற நூலில், திப்புசுல்தானின் மதவெறி ஆட்சியால் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றி கொண்டு வாழ  எங்கள் பூர்விகமான கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்த எங்கள் குடும்பம் கேரளா மாநிலம் பாலாக்காடு சென்றதை விரிவாக குறிப்பிட்டுள்ளார்.  திப்புசுல்தானை நல்லவனாக சித்தரிக்க நடக்கும் முயற்சி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு செய்யும் துரோகம். 

தமிழகத்திற்கு திப்புசுல்தான் செய்த கொடுமைகள் குறித்து ஏராளமான தகவல்களை திப்புசுல்தானே குறிப்பிட்டுள்ளான். 

எனவே, தமிழர்களையும், தமிழ்நாட்டையும் நேசிக்கும் திரைப்படத்துறையினரிடம் ஒரு வேண்டுகோள், திப்புசுல்தானை போன்ற மதவெறி ஆட்சியாளர் பற்றிய திரைப்படத்தில் நடிக்க மாட்டோம் என்பதையும், அப்படியே மாற்று மொழியில் தயாரிக்கப்பட்டாலும் அந்த திரைப்படங்களை தமிழகத்தில் திரையிட மாட்டோம் என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

திடீர் சர்ச் – தடுக்கப்பட்டது

வெற்றிச்செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று திடீர் சர்ச்கள் கட்டப்படுவது தடுத்து நிறுத்தபட்டது.

RTO தலைமையில் நடைபெற்ற meeting யில் மாவட்ட ஆட்சியர் இடம் அனுமதி பெற்ற பின் மட்டுமே Chruch கட்ட வேண்டும் என்ற தகவலை நாம் கூறியும், அதிகாரிகள்  ஏற்க மறுத்து மிக பெரிய வாக்குவாதம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாட்டு கலவரத்திற்கு பிறகு அரசு நியமித்த கமிஷன் தந்த அறிக்கையின் அடிப்படையில்  பிறப்பித்த ஆணையை காண்பித்த பிறகும் அதிகாரிகள்  ஒப்புக்கொள்ளவில்லை , அதோடு மட்டுமல்லாது அது அரசு ஆணையே அல்ல எனவும் அரசுக்கு பரிந்துரை மட்டுமே  என வாக்குவாதம் செய்தனர்.

பிறகு 2015 Feb மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்ற வழக்கில் உள்ள தீர்ப்பு காண்பித்த பிறகு சர்ச்க்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டனர்

கிறித்தவ ஆதரவாளர்களாக அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்க தக்கது

திடீர் சர்ச் – வழிபாடு நிறுத்தம் – சேலம்

சேலம் சூரமங்கலம் – அனுமதி இன்றி கிறித்தவ திடீர் சர்ச் – இந்துமுன்னணி தலையீட்டால் வழிபாடு நிறுத்தி வைப்பு. பெருகும் கிறித்தவ லேண்ட் ஜிகாத் , இந்துக்களே எச்சரிக்கை !!!

image

Scanned by CamScanner

சதுர்த்தி ஆலோசனை கூட்டம் – நாகர்கோவில்

குமரி மாவட்டம் நாகர்கோவில் நகர இந்துமுன்னணி விநாயகர்சதுர்த்தி விழா 5வது ஆலோசனைகூட்டம்  பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

image

வேலூர் ஆர்ப்பாட்டம் – ஆலயத்தின் மீது கைவைக்காதே!!

வேலூர்மாவட்டம் திமிரியில் புதியதாக சொந்த இடத்தில் கட்டிய கோவிலை இடித்த திமிரிEO முகம்மது ரிஸ்வானை கண்டித்து ராணிப்பேட்டை RDO அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது

image

ஈரோடு மாநகரில் சதுர்த்தி பொதுக்குழு

ஈரோடு மாநகர் மாவட்டத்தில் இந்து முன்னணி பொதுக்குழுக்கூட்டம்  நடைபெற்றது . 27 வது ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புற நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றிய  ஆலோசனைக்கூட்டம் மாநில செயலாளர் திரு.சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

image