தன்னிகரற்ற தலைவன் தோன்றிய இன்நன்னாளில் வேறுபாடற்ற சமுதாயம் படைப்போம் .
பாரதத்தை உலகின் குருவாக ஆக்கிட சபதமேற்போம்
Daily Archives: April 14, 2016
உள்துறை அமைச்சரை சந்தித்தார் வீரத்துறவி
தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஜிகாதி பயங்கரவாதத்தைத் தடுக்க NIA விசாரணை – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி.
ஹிந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி திரு இராம கோபாலன் அவர்கள் 14-4-2016 அன்று காலை 11 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களை, புது தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தமிழக ஜிஹாதி படுகொலைகள், தாக்குதல்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத சம்பவங்கள் குறித்த, ஆங்கில ஆவணப்படத்தை திரு இராம கோபாலன் அவர்கள் அமைச்சரிடம் அளித்தார். இந்த ஆவணப் படங்கள் கடந்த பிப்ரவரி 21 அன்று தமிழில் வெளியிடப்பட்டது.
ஆவணங்களின் அடிப்படையில் தமிழகத்தின் ஜிகாதி சம்பவங்கள் மீது NIA விசாரணை நடத்த வேண்டும் என்று இந்த சந்திப்பின்போது திரு இராம கோபாலன் அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினார். இந்த ஆவணங்களின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் உறுதியளித்தார்.