திருச்செங்கோடு புராதன நகரம் (heritage city) என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்கு 9 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி உள்ளது. ஆனால் திருச்செங்கோடு பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள மசூதியில் சேலம் நகர ஊரமைப்புத் துறை (Town planning), மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் அனுமதி வாங்காமல் சுமார் 90 அடி உயரத்திற்கு இரண்டு கோபுரங்கள் கட்டிக்கொண்டு உள்ளனர். (கைலாசநாதர் கோயில் கோபுரத்தைவிட இருமடங்கு) 19-06-2015 இந்துமுன்னணி சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட பிறகு திருச்செங்கோடு நகராட்சி நோட்டீஸ் கொடுத்து கட்டுமானப்பணிகளை நிறுத்தி வைத்தனர். Town planning ல் இம்மசூதிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்ற தகவலும் RTI ல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் தங்கமணியின் வாய்மொழி உத்தரவின் பேரில் 31-08-2015 அன்று கட்டுமானப்பணிகளை தொடர்ந்தனர். மீண்டும் இந்துமுன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர், திருச்செங்கோடு RDO, DSP, நகர்மன்றத் தலைவர் , நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு புகார் மனு அளித்த பின்பு திருச்செங்கோடு RDO 2-09-2015 அன்று மசூதி நிர்வாகத்தினரை வரவைத்து, மசூதியில் அனுமதி இல்லாமல் கட்டுமானப்பணிகளை தொடரக் கூடாது , 07-09-2015 க்குள் சாரத்தை பிரிக்க வேண்டும் என எழுதி வாங்கினார். ஆனால் மீண்டும் அமைச்சர் தங்கமணியின் வாய்மொழி உத்தரவின் பேரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. RDO உத்தரவுக்கு மரியாதை கிடையாதா? வருவாய்த்துறையும், நகராட்சியும் என்ன செய்து கொண்டுள்ளது?
அமைச்சர் தங்கமணி அவர்கள் சிறுபான்மையினரின் ஓட்டு மட்டும் இருந்தால் போதும் என்று முடிவு செய்து விட்டார் போலும், இனி அவர் ஓட்டு கேட்டு பெரும்பான்மை இந்துக்களிடம் வரவேண்டாம். அர்த்தநாரீஸ்வரரை வணங்கும் உண்மையான பக்தர்கள் எவரும் இனி அமைச்சர் தங்கமணிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம், பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் உள்ளதா? சட்டம் அனைவருக்கும் சமமா? என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்தான் விளக்க வேண்டும்.
Super