திண்டுக்கல் நகர் தேனி ரோட்டில் உள்ள எருமைக்கார தெருவில் வசிக்கும் இந்துக்கள்,தங்கள் பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக விநாயகர் கோவிலை அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.ஓலை கீற்றுகளை மாற்றி புதிய கூரை அமைக்க 12.12.2014(சனிக்கிழமை) அங்குள்ள மக்கள் சென்றனர்.அப்போது அருகிலுள்ள பேகம்பூர் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அக்கோயில் உள்ள பகுதி தங்களுக்கு சொந்தமான இடம் என்று இந்துக்களிடம் தகராறு செய்தனர்.கோவிலின் பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கோவிலுக்கு சொந்தமானதாக இருக்க அதனை ஏற்க மறுத்த காவல்துறை கண்காணிப்பாளர் ,முஸ்லிம்களை விட்டு சிலையை அகற்ற அனுமதித்தார். எருமைக்கார வீதியின் தாய்மார்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் சிலையை எடுக்க ஆட்சேபித்து கோவிலை சுற்றி நின்றனர். அவர்களை அப்புறப்படுத்த பெண் போலீசாரை விட்டு தடியடி நடத்தி கைது செய்து AR காவல் துறையினர் தங்கும் இடத்தில் அவர்களை வைத்துள்ளனர்.மேலும் காவலர்கள் விநாயகர் சிலையை அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றுவிட்டனர்.தாய்மார்களை தாக்குவதை கண்டித்து தடுக்கப் போன நகர செயலாளர் திரு.சஞ்சீவிராஜ் அவர்களை ஆய்வாளர் ஜெயச்சந்திரன் அடித்து வேனில் ஏற்றினார்.இந்த பிரச்சினை நடக்குமிடத்திற்கு பத்திரிக்கையாளர்ளை அனுமத்திக்காது தடுத்துவிட்டனர் .இத்தகைய அராஜகத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்டங்களில் பதட்டம் நிலவுகிறது