ராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதியை ராக்கெட் ஏவு தளம் அமைக்க விண்வெளி விஞ்ஞானிகள் தேர்வு செய்து உள்ளனர்.

பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகில் உள்ளதால் ராக்கெட் எரிபொருளும் மிக குறைந்த அளவு தேவை ஆகையால் தான் குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்துள்ளோம் என்று தலைமை விஞ்ஞானி பத்திரிக்கைக்கையார் சந்திப்பில் கூறியுள்ளார்.

சாத்தான்குளம், திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் தற்போது இல்லை.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளம் அமைந்தால் இந்த பகுதிகளில் தொழில் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது…

தற்போது தெலுங்கானா கவர்னராக இருக்கும் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக இருந்த போது குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்க தொடர்ந்து பாரத மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் 2019 வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பாரத பிரதமர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் அந்த கடிதத்தில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைத்தால் நாடு பலனடையும் என மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளம் தொடர்பாக திருமதி.சசிகலா புஷ்பா MP எழுப்பிய கேள்விக்கு விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் பதிலளித்தார்.

அதன்பின் 2019ல நிலம் தேர்வு செய்து அந்த நிலத்தை எடுப்பதற்காக மத்திய அரசு மாநில அரசுக்கு பரிந்துரை செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக களத்தில் இறங்கி இடம் ஆய்வுசெய்து இடத்தை தேர்வு செய்து இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தாகிவிட்டது.

ஆனால் இப்போது மக்களை தூண்டிவிட்டு அதுவும் அப்பாவி மீனவ மக்களை தூண்டிவிட்டு தங்கள் சுயலாபத்திற்காக இந்த திட்டத்தை தடுக்க நினைக்கின்றனர்..

மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் அரசு உயரதிகாரிகள் அவர்களும் எக்காரணம் கொண்டும் மணப்பாடு மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மணப்பாடு ஊருக்கு செல்ல கூடாது. தேச வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டி குந்தகம் விளைவிக்கும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

மேலும் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் ஓட்டுக்காக சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலம் அப்பாவி மினவர்களை‌ பகடைக் காயாக பயன்படுத்தி இந்த போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றார்.

2019 ஆண்டு ராக்கெட் ஏவு தளம் அமைக்க ஆதரவளித்த திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தற்போது இந்த போராட்டத்தை ஊக்குவித்து வருவது அவரின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது…

தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டாலும்,கொலை நடந்தாலும், விபத்து ஏற்பட்டு இறந்தாலும், அதனை காரணமாக வைத்து பிண அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ராக்கெட் ஏவு தளம் விஷயத்தில் மௌனமாக இருப்பது ஏன்???

வி.பி.ஜெயக்குமார், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்,
ராக்கெட் ஏவு தளம் ஆதரவு குழு தலைவர்,
பரமன்குறிச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *