Tag Archives: #ஹிந்துமதம்

அரசு மெத்தனம்- வழக்கின் ஆவணங்கள் காணவில்லை- தமிழக முதல்வருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான வைரவேல் உட்பட சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார் .

சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக அரசின் உள்துறை செயலாளர் அறிக்கை அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

தமிழக அரசு ஹிந்து ஆலயங்ககளின் விஷயத்தில் மிகுந்த மெத்தனமாக நடந்து கொள்கிறது .

நேர்மையான போலீஸ் அதிகாரி பொன் . மாணிக்கவேல் அவர்களுக்கு பணி நீடிப்பு கொடுக்காமல் இருக்க காட்டப்பட்ட முக்கியத்துவம் தற்போது அந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க காட்டவில்லை என்று தோன்றுகிறது .

இந்த ஆவணங்கள் காணாமல் போனதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பார்கள் என்றும் மிகப்பெரும் மாஃபியா கும்பலின் சதி உள்ளதாகவும் இந்து முன்னணி கருதுகிறது .

ஆகவே தமிழக அரசும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் தக்க கவனம் கொடுத்து கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

வி.பி.ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

கட்சியாவது மண்ணாங்கட்டியாவது- இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதிக்கும் அனைத்து கட்சியின் இந்துக்கள்

இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் !கட்சியாவது மண்ணாங்கட்டியாவது என கூறி போராட்டம்நெல்லை மாநகரம் பேட்டையில் வாலஜா பள்ளிவாசல் அருகில் 3 தலைமுறைகளாக தொழில் செய்து வரும் இந்து கடைகளில் முசுலீம் அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பூட்டு போட்டு எங்கள் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து சாதி கட்சிகளை கடந்து அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது.இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் இந்துக்கள் பாதிக்கப்படுபவதும் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதும் அரங்கேறி வரும் சூழலில்,நெல்லையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது, பெரும்பான்மையாக இந்துக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் அருகே கடைவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர், முதலில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது தங்களிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும், தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து கடையை காலி பண்ணிவிட்டு ஓடிவிடு என மிரட்டல் விடுத்து வந்ததாகவும், அரஜாகத்தின் உச்சமாக கடையை பூட்டு போட்டு வெளியூரில் இருந்து சில பயங்கரவாதிகளை அழைத்து வந்து மிரட்டல் விடுத்துள்ளனர், இதில் கொடுமை என்னவென்றால் அந்த பகுதியில் வியாபாரம் செய்வதில் திமுகவை சேர்ந்தவர்கள் தான் அதிகம், அவர்களிடம் உங்கள் கட்சி எங்களுக்கு பிரச்சனை என்றால்தான் வரும் ஓடி விடுங்கள் என மிரட்டல் விடுக்க கட்சியாவது மண்ணாங்கட்டியாவது தன்மானமே முக்கியம் என கூறி அங்கு கடைவைத்திருந்த கடையின் உரிமையாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் என கட்சி பாராமல் இந்துக்கள் என்ற ஒற்றுமையுடன் இணைந்து இந்து முன்னணி, வி எச் பி ஆகிய இயக்கங்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.இந்த சூழலில்தான் மாலையில் நடந்த போராட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாதிகள் இன்றி சேர்ந்ததால் கடையை மீண்டும் அவர்களே வலிய வந்து திறந்து கொள்ள வழிவிட்டுருக்கிறார்கள்.இனி நெல்லையில் ஒற்றை இஸ்லாமிய கடைகளில் பொருள்களை வாங்கமாட்டோம் எனவும், எங்கள் கடைகளில் அவர்கள் வியாபாரம் செய்யாத போது அவர்கள் கடைகளில் நாங்கள் ஏன் வியாபாரம் செய்யவேண்டும் எனவும் கோசம் எழுப்பினர்.
மேலும் அங்கு இந்து அமைப்பு சார்பில் வணிகர் சங்கம் உருவாக்கப்படும் என்றும் இனி இந்துக்கள் கடைகளில் வியாபாரம் செய்வோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பாதிக்கப்படும் போது உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இராம.கோபாலன் அறிக்கை- தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு

15-2-2020

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது,
சர்ச், மசூதிகளை பழுது பார்க்க நிதி ஓதுக்கீடு செய்கிறது..
அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்..

தமிழக அரசின் பட்ஜெட்டில் சர்ச்க்கு 5 கோடியும், மசூதிக்கு 5 கோடியும் பழுதுபார்க்க ஒதுக்கியுள்ளது. இது முன்னர் 60 லட்சமாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறது. தமிழக பட்ஜெட்டில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது.

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி உள்ளது. இந்நிலையில் மசூதி, சர்ச் பராமரிப்பு என நிதியை தமிழக அரசு அறிவிக்க காரணம் என்ன?

இந்து கோயில்களின் சொத்துக்களைப் பட்டாபோட்டு கொடுக்கவும், உண்டியல் பணத்தை கொள்ளையடிக்கவும் துணைபோவதை இந்துக்கள் உணர வேண்டும்.

மசூதிக்கோ, சர்சுக்கோ வருகின்ற நிதி, வருமானம் எவ்வளவு என்பதுகூட தெரிந்துகொள்ளாமல், தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

அதேசமயம், இந்து கோயில்களின் சொத்துக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ள தமிழக அரசு, கோயில் நிலங்களை பட்டாப்போட்டு கொடுக்கவும், நாத்திகவாதி அண்ணாதுறையின் இறந்த நாளைக்கு சமபந்தி போஜனம் போன்றவற்றால் சீரழிக்கவும் செய்கிறது.

பல்லாயிரம் கோயில்கள் சீரழிந்து வருவதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், கோயில் வருமானத்தை, நிர்வாக செலவினங்கள் என்ற பெயரில் சுரண்டி வருகிறது என்று, இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

அரசு எடுத்துக்கொண்ட பின்னர், பத்தாயிரம் கோயில்களை காணவில்லை, பல லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் களவாடப்பட்டிருக்கிறது.

பல கோடி ரூபாய் சொத்து மதிப்புகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இறைவன் திருமேனிகள், பஞ்சலோக விக்கிரகங்கள், ஆபரணங்கள் கொள்ளைபோயுள்ளன. இதற்கெல்லாம் துணைபோனவை தான் திமுக, அதிமுக கட்சிகள். கோயிலை அழித்து, இந்து சமய நம்பிக்கைகளை சீர்குலைக்கும் பணியைத்தான் செய்து வருகின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் சிதலமடைந்து கேட்பாரற்று அநாதைகளாக கிடக்கின்றன. 5,000க்கும் அதிகமான கோயில்களில் விளக்கெரிய எண்ணைகூட இல்லாமல் இருண்டு கிடக்கின்றன. சில ஆயிரம் கோயில்களில் கிடைக்கும் அபரிதமான வருமானத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்கள் பணிபுரிகிறார்கள். இப்படியே போனால், நாளை கோயில்களில் உள்ள திருமேனிகளை அகற்றிவிட்டு, சர்ச்சாக, மசூதிகளாக தமிழக அரசே மாற்றிக்கொடுத்துவிடும் என அஞ்சுகிறோம்.

அப்போதும், இந்த சொரணையற்ற இந்து சமுதாயம், திராவிட அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து, நமது தொன்மையான இந்து கலாச்சாரத்தை, இந்து இறையாண்மையை, இந்து மத நம்பிக்கைகளை அழித்துக்கொள்ளப்போகிறதா? அப்படி இருப்பது, நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற்றவும், ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் பாதுகாக்கவும் வலியுறுத்த இந்து சமுதாயத்தை, ஆன்மிக அமைப்புகளை, ஆதினங்கள், மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசும், தமிழக அரசியல்கட்சிகளும் இதுபோல் ஓட்டு வங்கி அரசியலுக்கு இரட்டை நிலைப்பாட்டு எடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

முடியாததை!! முடித்து காட்டியது !! இந்து முன்னணி – தூத்துக்குடியில் இந்து ஒற்றுமையின் வெளிப்பாடு

முடியாததை!!
முடித்து காட்டியது !!
இந்து முன்னணி .

எங்கே…?என்ன….?

தூத்துக்குடி மாநகர்
மேட்டுப்பட்டி, முத்தரையர் நகர் திரேஸ்புரம்(பெரிய ஊர்),விவேகானந்தர் நகர் (கரைவலை),புதிய துறைமுகம்( சுனாமி காலனி). இந்த ஊர்களை இந்து முன்னணி ஒருங்கிணைத்தது ….எதற்காக?

1.முத்தரையர் நகர் மீனவர்களை மணப்பாடு,ஆலந்தலை,போன்ற ஊர்களில் கிறிஸ்தவ மீனவர்கள் அவர்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று இந்து மீனவர்களின் படகுகளை பிடுங்கி வைத்து கொண்டனர்.

பாதிரியார் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் பஞ்சாயத்து செய்து ஒரு லட்ச ரூபாயை கிறிஸ்துவ சர்ச்க்கு அபதாரமாக கொடுத்தபின் படகுகளை விடுவித்தனர். தகவல் அறிந்த இந்துமுன்னணி இந்த விஷயத்தில் களமிறங்கியது. மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,மீன்வளத்துறை அமைச்சர் ,ஆகியோரிடம் மனுக்களை கொடுத்த பின் இன்றுவரை அந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

2. தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகத்திற்கு தீர்த்த நீரெடுக்க சங்கு முக விநாயகர் ஆலயத்திற்கு செல்வதுதான் வழக்கம்.
அந்த கோவில் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்த நேரத்தில் தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி இதில் தலையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து பின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக அந்த ஆலயம் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

3.தூத்துக்குடி துறைமுகம் சார்பாக அந்தப் பகுதியில் 40 லட்சம் மதிப்பில் கழிப்பறை, குளியலறை,வலைக் கூடம்,மீனவர்களுக்கான உபகரணங்கள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.

4.விவேகானந்தர் நகர் (கரைவலை) பகுதி மீனவர்களை கிறிஸ்துவ மீனவர்களால் மீன் பிடிக்க கூடாது என்று தடை விதித்த போது மீன்வளத்துறை இணை இயக்குனரிடம் நேரடியாக சென்று இது சம்பந்தமாக பேசி இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த ஊர்களையெல்லாம் இணைத்து நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவினை இந்து முன்னணி சார்பாக மிகவும் கோலாகலமாக கொண்டாடியது.

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை செய்தி

இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சி .சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை செய்தி

வணக்கம்.

திரைப்பட நடிகர் யோகிபாபு அவர்கள் நடித்து வெளிவர உள்ள காக்டெய்ல் என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது .

இந்த விளம்பரத்தில் தமிழ் கடவுள் முருகனின் போன்று யோகிபாபுவின் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது .மது வகைகளின் பெயரைத் தாங்கி வரும் திரைப்படம் ஒன்றிற்கு முருகப்பெருமான் போல வேடமணிந்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது முருக பக்தர்களையும், இந்துக்களின் மனதையும் புண்படுத்தும் விதமாக உள்ளது .

சம்மந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் மற்றும் யோகி பாபு ஆகியோர் இந்த செயலுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நடிப்புத்துறை, கலை என்ற பெயரில் இந்து கடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் தொடர்ந்து புண்படுத்தும் போக்கு தமிழ் திரைப்படத்துறையில் வாடிக்கையாக உள்ளது.

இதே போன்று மற்ற மத விஷயங்களை கிண்டல் செய்ய இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? இந்துக்கள் தட்டிக் கேட்க ஆரம்பித்தால் இந்துக்களை புண்படுத்தும் தமிழ் திரையுலகம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆகவே உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன் விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

தாயக பணியில்
சி.சுப்பிரமணியம் மாநிலத்தலைவர் ஹிந்து முன்னணி

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
திருப்பூர்

31.10.19

பத்திரிகை அறிக்கை

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – கோவில் நிலங்களை பட்டா போட்டு வழங்கும் அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. அதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான பட்டா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்துமுன்னணி பேரியக்கம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கண்டன தீர்மானம் இயற்றி அப்போதே அதனை குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியது.

தற்போது அதே அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு தருவதாக வாக்குமூலம்( affidavit) தாக்கல் செய்துள்ளது.
இதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இது திருடனுக்கு விருது வழங்குவது போல கேவலமான செயல் . ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை அரசே அங்கீகரித்தது போல ஆகிவிடும்.

கோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் தடையின்றி நடைபெற நமது முன்னோர்கள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக தந்து, அதன் வருமானத்தினை கோவில்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர் .

அந்த கோவில் நிலங்களை, சொத்துக்களை பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை .

கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, நிலங்களை மீட்டு, தண்டனை வாங்கித் தருவது தான் சரியான நடவடிக்கை .ஆனால் தற்போது நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சியினர் என்பதாலும், அவர்கள் தங்களது பினாமிகளை வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் அரசு அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியை அரசு மேற்கொள்கிறதோ? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 1லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவில்களை அழிக்கக்கூடிய இந்த செயலால் பக்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் .அரசின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் .

ஆகவே அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வாக்குமூலத்தை(affidavit) திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

மேலும் இந்த அடாத செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள், ஆன்மீக அன்பர்களை ஒன்றிணைத்து மாவட்டம்தோறும் வருகின்ற 4 .11. 19 – திங்கட்கிழமை அன்று ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்தும் அரசாணையை அரசு ரத்து செய்யாத பட்சத்தில் இந்து முன்னணி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .

தெய்வீக பணியில்

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

விநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை

இந்து என்பது சமய, சமுதாய, பண்பாட்டின் குறியீடு..
கடந்த 36 ஆண்டுகளாக இந்து சமுதாயத்தை அரசியல், சாதி, மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமைப்படுத்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவை வெற்றிகரமாக இந்து முன்னணி நடத்தி வருகிறது.
இவ்விழாவில் அனைத்து ஆன்மீக பெரியோர்களும், சமுதாய தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எந்த பேதமும் இல்லாமல் கலந்துகொள்கிறார்கள்.
தேனியில் நடைபெற்ற விழாவில் அதிமுக கட்சியைச் சேர்ந்த, அப்பகுதி எம்.பி. திரு. ரவீந்திரநாத் அவர்கள் கலந்துகொண்டு, இந்துவாக வாழ்வோம் என சமுதாய ஒற்றுமை குறித்து பேசினார். இதனை திரித்து சில அரசியல்வாதிகள், திராவிட அமைப்புகள், தனி நபர்கள் சிலர் சமூக வளைத்தளத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
முஸ்லீம்கள் தங்களை முஸ்லீம்கள் என்று கூறும்போதும், கிறிஸ்தவர்கள் தங்களை கிறிஸ்துவர்கள் என கூறும்போதும், அவர்கள் விழாவில் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுபவர்களும் அதே கருத்தை வலியுறுத்திப் பேசும்போதும் எழாத விமர்சனங்கள், இந்து விழாவின் போது ஏன் செய்கிறார்கள்?
இந்து என்பது இந்த நாட்டின் பண்பாட்டு அடையாளம் என உச்சநீதி மன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்துக்கள் ஒருபோதும் மற்ற மதத்தினர்மீது, நாட்டின் மீது ஆக்கிரமித்ததோ, அழித்ததோ கிடையாது. இந்துக்களால் தான் ஜனநாயகம், கருத்து சுதந்திரம், அமைதி இந்த நாட்டில் இருந்து வருகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,  கவலை அளிக்கிறது.. 

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
19-7-2019
பத்திரிகை அறிக்கை
நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,
கவலை அளிக்கிறது..
அத்திரவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து, கடந்த ஞாயிறு அன்று இந்து முன்னணி சார்பாக, ஒரு கடிதத்தை முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைத்தோம். அதன் பிறகும் எந்தவித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் செய்யாமல், பத்திரிகையாளர்களை அழைத்து வாய்பந்தல் போட்டது.
48 நாட்கள் நடக்கும் ஒருவைபத்திற்கு ஏற்ப நிர்வாக செயல்படவில்லை. நேற்று நான்கு பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்., இது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.
இது குறித்து விரிவாக பேச வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மேம்போக்காக கேள்வியை கேட்டதும், அதற்கு தமிழக முதல்வரின் சாதாரண பதிலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
திருப்பதியில் வருடந்தோறும் தரிசனம் நடக்கிறது. இதற்கு தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், காஞ்சியில் 48 நாட்கள் தான் தரிசனம். அதனால், லட்சக்கணக்கில் தானே வருவார்கள் என்பதுகூட அரசுக்குத் தெரியாதா? கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. அத்திவரதரோ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார் எனும்போது சிந்தித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா?
மாவட்ட கலெக்டர், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் என தமிழக முதல்வர் சட்டசபையில் கூறியிருப்பது, எத்தனை அலட்சியமான பதில்.
மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் வரவும் திரும்பிப்போகவும் மக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. உள்ளூர் பஸ் வசதி போதவில்லை. ஆட்டோக்கள் அடிச்சவரைக்கும் லாபம் என கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறார்கள். இது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா? தெரியாதா?
வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடுகூட இல்லை. வரதரை தரிசிக்கும் அறையில் போதுமான காற்றோட்டம் இல்லை. அங்கு மின்விசிறி, காற்று வெளியேற்ற மின்சாதனமும் இல்லை. இத்தனை பிரச்னைகளுக்கு இடையில் பக்தர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி லட்சக்கணக்கில் வந்து தரிசனம் செய்து செல்லுகிறார்கள்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு, தகுந்த ஏற்பாடுகளை செய்துத்தர அக்கறை காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

இராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்

14.07.19
பத்திரிகை அறிக்கை

வரலாற்று சிறப்புமிக்க அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்..
நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் அத்தி வரதர். அவரை தரிசிக்க சாதாரண பொது மக்கள் முதல் பாரதத்தின் முதல் குடிமகன் வரை பல முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தினசரி சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இதுவரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள்.

இதுபோல, கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றது. மிகச் சிறந்த ஏற்பாடுகளை அந்த மாநில அரசு செய்திருந்ததை கண்ணாரக் கண்டோம். அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.

அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே,

1. தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, மற்றும் அங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வரிசையில் நிற்பவர்களுக்கு குடிநீர் தர ஏற்பாடு. (வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

2. தரிசனத்திற்கு நிற்பவர்களுக்கும், ஆங்காங்கே நிற்பவர்களுக்கும் தேவையான பந்தல் அமைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கமடைகிறார்கள்.

3. வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்காவது ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக வினியோகம் செய்யச் சொல்லலாம்.

4. தரிசன வரிசையில் போய், கோயில் உள் வரிசை வரும்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும், விரைவாக, அதிகமான பக்தர்கள் தரிசிக்க வசதி ஏற்படும்.

5. மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்தும், வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்தந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதியும் அவசியம்.

6. வயதானவர்கள், நோயாளிகள் தரிசினம் செய்ய வேண்டும் என்ற பக்தியில் வருகிறார்கள். அவர்களுக்கும், கைக்குழந்தையோடு வருபவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் உடனடியாக செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வரவதற்கும், போவதற்கும் ஏற்பாடு தேவையான அளவில் இருப்பது அவசியம்.

7. தன்னார்வ தொண்டர்களை இணைத்து முழு சேவைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

இவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழக மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல்  ஏன் பாரபட்சம் காட்டுகிறது…? 

16-5-2019

பத்திரிகை அறிக்கை
மத விரோதத்தைத் தூண்ட, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த
தேர்தல் நடத்தை விதி அனுமதிக்கிறதா?!
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க தேர்தல் அதிகாரியே நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம், அல்லது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்பது நடைமுறை. கடந்த மாதம் திராவிட கழக தலைவர் வீரமணி, இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரை தரக்குறைவாக பொது தளத்தில் பேசினார், பேட்டி அளித்தார். இது குறித்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால், வீரமணி தேர்தல் பிரச்சாரம் செய்வதை தடுக்கக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஆணையரிடம் புகார் கொடுத்த பின்னரும் தொலைக்காட்சி/சமூக ஊடகங்களில் பேட்டி அளித்த வீரமணி அப்படித்தான் பேசுவேன், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்றார். மற்ற மாநிலங்களில் முதல்வர், அமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் யார் தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை பேசினாலும், அவர்கள் பிரச்சாரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடைவிதிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையானது.
அதன் தொடர்ச்சியாக, திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மையம் என்ற கட்சித் தலைவருமாக இருக்கும் கமலஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து, காந்தியை கொன்ற கோட்சே தான் அவர் எனப் பேசினார். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டித்து 30 காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளது. பல இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளது.
இதுவரை நாம் கொடுத்துள்ள புகார்கள் மீது தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? அப்படியென்றால், தேர்தலில் மத துவேஷத்தை தூண்டும்படி பேசினால் நடவடிக்கை எடுக்காமல் பொது அமைதி கெடுவதை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க நினைக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
மகாத்மா காந்திஜி, கோட்சே ஆகிய இருவரும் இந்து தான். இதில் எங்கிருந்து மத தீவிரவாதம் வருகிறது? ராஜீவ் காந்தியைக் கொன்றது எந்த தீவிரவாதம்? திருபுவனம் ராமலிங்கத்தை கொன்றது எந்த தீவிரவாதம்? இந்து இயக்க தலைவர்களை வெட்டிக் கொன்றார்களே அது எந்த தீவிரவாதம்? இதையெல்லாம் கமலஹாசன் இதுவரை ஏன் பேசவில்லை?
கமலஹாசன் மக்களை திசைத்திருப்ப மத பிரிவனையை ஏற்படுத்தி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இப்படி பேசுகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. இதுபோல் மற்றவர்களும் பேச ஆரம்பித்தால், தேர்தல் கமிஷனும், காவல்துறையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? என்பதே நமது கேள்வி.
நேற்றும், மதுரை திருப்பரங்குன்றத்தில் பேசிய கமலஹாசன் தனது கருத்தை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத பிரச்சாரத்தை காவல்துறையும், தேர்தல் கமிஷனும் வேடிக்கை பார்க்கும் என்றால், மக்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன? மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தேர்தல் கமிஷன், கமலஹாசன், வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
இச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம்.