Tag Archives: #கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி

இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

24-9-2018
இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- பத்திரிக்கை அறிக்கை
இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களைப் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என அரசு கூறிக்கொண்டது.

இந்து சமயப் பணி செய்யும் துறையாக இது இருக்கிறது. இதற்காக பிரத்யேக தேர்வு நடத்தி, இந்துக்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை பணி என்பது அரசு பணி என்பது மட்டுமல்ல. இந்து சமயப்பணி என்பதால், அதில் பணியாற்றுபவர்களுக்கு இந்து சமயத்தின் மீது பற்றும், நம்பிக்கையும், ஈடுபாடும் இருத்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சம்பந்தமான உண்மையான விவரத்தை மறைத்திருந்தால் அது குற்றமாகும்.

அப்படியில்லாமல், வேலையில் சேர்ந்தபின்னர் இந்து சமயத்தைவிட்டு வேற்று மதத்திற்கு மாறியிருந்தால், தார்மீக ரீதியில் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனக்கும் உண்மையாக இல்லாமல், தான் செய்யும் பணிக்கும் உண்மையாக இல்லாதவர்களை இந்து சமய அறநிலையத்துறை, பணியிலிருந்து நீக்குவது கடமையாகும்.

அதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்களின்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.

சமீபத்தில், பா.ஜ.க. மாநிலப் பொறுப்பாளர் திரு. கே.டி. ராகவன் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் மறைமுக (Crypto) கிறிஸ்தவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கருத்தினைத் தெரிவித்தார்.

அதற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கடிதம் ஊடகங்களில் வந்துள்ளது. இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தின் திட்டமிட்ட சதியானது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

கிறிஸ்தவர்கள், சாமி பிரசாதம் எனக் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள். ஆனால், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்து தரப்படும் ஊதியத்தை பெறலாமா?

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுமார் 40,000 கோயில்களை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, சில ஆயிரம் கோயில்களில் தான் நித்திய பூஜை நடைபெறுகிறது. பல்லாயிரம் கோயில்களில் வழிபாடு, விளக்கு இல்லை, விழாக்கள் போன்றவை நடைபெறுவதில்லை, முறையாக கும்பாபிஷேகமும் நடைபெறாமல் சீரழிக்கப்படுகின்றன. சுமார் 1000 கோயில்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுபோன்ற முறையற்ற நடவடிக்கைகளுக்கு, இந்த மறைமுக, மதமாறிய கும்பலும் காரணமாக இருக்கலாம்.
இது இந்து திருக்கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்.

எனவே, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்த முறையான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அப்படி மறைமுக கிறிஸ்தவர்களாக இருப்போரை உடனடியாக பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, ஒளிவு மறைவின்றி எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

கோவிலைக் காக்க மத்திய அமைச்சரிடம் மனு- தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம்
#இந்து முன்னணி சாா்பாக குரும்பூா் இரயில்வே நிலையத்தின் அருகே உள்ள விநாயகா் கோவில் சம்பந்தமாக மத்திய இனையமைச்சா் மாண்புமிகு.#ஜெயந்த்சின்ஹா அவா்களிடம் மாவட்டபொறுப்பாளா்கள் மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பாக மனு கொடுக்கப்பட்டது