Daily Archives: August 21, 2020

தனியார் இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் வைத்து வழிபாடு- மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

21.08.2020இந்த ஆண்டு கொடிய வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவேண்டும் என்பதில் இந்து முன்னணி தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறது.தமிழகத்தில் நோய் தாக்கம் ஏற்பட்ட நாள் முதல் பல்வேறு நலத் திட்ட பணிகளை தமிழகமெங்கும் செய்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்திருக்கிறது இந்து முன்னணி பேரியக்கம்.ஆகவே சமுதாய அக்கறையோடும், பொறுப்புணர்வோடும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை திட்டமிட்டது. அந்த அடிப்படையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறாது, ஊர்வலங்கள் இருக்காது, சேர்ந்து சென்று விசர்ஜனம் (விநாயகர் கரைக்கும்) நிகழ்ச்சிகள் இருக்காது என்று இந்து முன்னணி ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு தற்போது மாண்பமை உயர்நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை சொல்லியிருக்கிறது.இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் கொண்டாடப்படும்.22 ம் தேதி அன்று தனியார் இடங்களில், வீடுகளில், கோவில்களில் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவரவர் ஏற்பாடுகளில் (கூட்டம் சேராமல்) அன்று மாலையே விநாயகர் திருமேனிகளை விசர்ஜனம் செய்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.அரசும், அரசு அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.விநாயகரின் அருளால் இந்த கொடிய நோய் தொற்றானது அழியும். தமிழகம் மீண்டும் நல்ல நிலையை அடையும்.தாயகப் பணிகளில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மாநிலத்தலைவர்