Daily Archives: April 19, 2020

தீபாவளி,பொங்கல் இனாம் வழங்குவது போல் ரம்ஜான் நோன்பு அரிசியை அனைவருக்கும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்துமுன்னணி மனு தாக்கல்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450 மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக 2895 பள்ளிவாசல்கள் மூலம் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தமிழக அரசு 16.4.3020 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக இந்துமுன்னணி சார்பில் அதன் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சென்னை உயர்நிதிமன்றத்தில் தடை உத்திரவு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில்…

தை பொங்கலுக்கு அரிசியும், வெல்லமும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும் நிலையில் ரம்ஜான் அரிசியை மட்டும் குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்குவது பாரபட்சமான ஒன்றாகும் எனவும்

மேலும் கொரோணோ ஊரடங்கு காலத்தில் மத வழிபாட்டு தலங்கள் மூலம் வழங்குவதால் கொரோணோ தொற்று மேலும் பரவலுக்கு வழி ஏற்படும்

அரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் பொருட்களை வழங்க சிவில் சப்ளைஸ் பொது விநியோக திட்டம் (PDS ) உள்ளது. எனவே ரேசன் கடைகள் மூலம் அதனை அனைத்து மக்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்க வேண்டும்

எனவே 16.4.2020 ல் அரசு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது போல் பள்ளிவாசல் மூலம் முஸ்லீம்களுக்கு மட்டும் அரிசி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மனு தொடுக்கப்பட்டுள்ளது

இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு T.அண்ணாமலை இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்

இம் மனு நாளை திங்கள் கிழமை விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது