Daily Archives: February 16, 2020

தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினம் – சமுதாய சமர்ப்பண தினம் – செயலையும், செல்வத்தையும் தந்து தெய்வீக பணியில் பங்கு பெற வேண்டுகிறோம் .

இந்து தர்மத்தையும் , தேசத்தையும் காக்கும் பணியை இந்து முன்னணி செய்து வருகின்றது .

தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்களை, நிலங்களை, குளங்களை மீட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கிறித்துவ மோசடி மதமாற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளது .

பிரிவினைவாதிகளால் தேசத்திற்கு ஆபத்து நேரிடும் போதும் , இந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் போதும் நேரிடையாக களத்தில் இறங்கி போராடிவருகிறது .

தன்னலம் கருதாத பல ஆயிரக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கமாக இந்து முன்னணி இயங்கி வருகிறது.

இதுபோன்று பல்வேறு வகையில் இந்து தர்மத்தை பாதுகாக்கக்கூடிய பணிகளை இந்து முன்னணி செய்து வருகின்றது .

தங்களைப்போன்ற நல்லோர்களின் ஆதரவைக் கொண்டு இந்து தர்மத்தைக் காக்க இந்துமுன்னணி பாடுபட்டு வருகிறது.

இந்துமுன்னணியின் முதல் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினத்தை சமுதாய சமர்ப்பணதினமாக கொண்டாடி வருகிறோம் .

நாம் நமது சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .

எனவே , தங்களது ஆக்கப்பூர்வமான செயலையும், செல்வத்தையும் தந்து இந்த தெய்வீக பணியில் பங்கு பெற வேண்டுகிறோம் .

தாங்கள் சமர்பிக்கும் நிதி….

1. திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதியில் இயங்கி வருகின்ற பாரதியார் குருகுலம் ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கின்ற 76 குழந்தைகளின் படிப்பிற்கும், பராமரிப்பிற்கும் செலவிடப்படுகிறது.

இவர்களுக்கு உணவு அளிக்க விரும்புவோர் தாங்கள் அளிக்கும் நிதியை Bharathiyar Gurukulam Trust என்னும் பெயரில் DD / Check ஆகவும் அளிக்கலாம்.

(ஒரு வேளை உணவு செலவு ₹2000, ஒரு நாள் உணவு செலவு ₹5000, ஒரு மாத உணவு செலவு ₹ 1,50,000)

2 . இந்து சமுதாயத்திற்காக இந்து முன்னணியில் தன்னை இணைத்துக்கொண்டு முழு நேரமாக பணியாற்றும், முழு நேர ஊழியர்களின் அடிப்படை செலவுகளுக்காக செலவிடப்படுகிறது. 84 முழுநேர ஊழியர்கள் தர்மம் காக்கும் பணியை செய்து வருகிறார்கள். அவர்களை பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும்.

3. குழந்தைகளுக்கு நமது இந்து தர்மத்தை போற்றும் பண்பாட்டு வகுப்புகள் நடத்த செலவிடப்படுகிறது.

4. கோசாலைகளுக்கு வரும் வயதான பசுக்களை பராமரிக்க செலவிடப்படுகிறது.

5. இஸ்லாமிய சமுதாயத்தினர் தங்களது சமுதாய வளர்ச்சிக்காக ஜக்கத் என்ற பெயரில் தனது வருமானத்தை கொடுக்கிறார்கள். கிறிஸ்துவர்களும் தனது வருமானத்தில் தசமபாகம் எனும் பெயரில் தங்களது சமுதாய வளர்ச்சிக்காக கொடுக்கிறார்கள்.

இந்து சமுதாயத்தை மேம்படுத்த ஒவ்வொரு இந்துவும் இயன்றதை செய்வோம்.

இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார் DGP க்கு கடிதம் – சட்டவிரோத போராளிகளினுடைய PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யவேண்டும்.

சமீபகாலமாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் மத்திய , மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் அதிகமாக தமிழ்நாட்டில் நடந்து வருகின்றது .

இந்த போராட்டங்களை இனிவரும் காலங்களில் ஓரளவுக்கு கட்டுபடுத்த வேண்டுமானால் போராட்டத்தில் கலந்துக் கொண்டு கைது செய்யப்படும் நபர்களின் பெயர் விபரங்களை CCTNS பதிவேட்டில் எற்றினால் பிற்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு , கடவுசீட்டு , விசா , தனியார் துறை வேலைக்கான PCC சான்றிதழ் , NOC சான்றிதழ் , ஓட்டுனர் உரிமம் போன்ற அத்தியாவசியபணிகளில் அவர்களுக்கு தடை ஏற்ப்படும் .

எனவே PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யப்படவேண்டும் . இவ்வாறு செய்யும் பட்சத்தில் அதற்கு பயந்து தவறான போராட்ட களத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கமாட்டார்கள் .

ஆகவே தாங்கள் விரைந்து போராட்டத்தில்ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழகத்தை மீண்டும் அமைதி பூங்காவாகமாற்றவும் கேட்டுக்கொள்கிறேன் .

தாயகப் பணியில்

வி.பி. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி