Daily Archives: October 2, 2014

இல்லம் தோறும் சக்திபூஜை கொண்டாடுவோம்

நாடுமுழுதும் இன்று சரஸ்வதி பூஜை ., ஆயுத பூஜை கொண்டாடி வரும் வேளையில் நாம் அனைவரும் நமது இல்லங்களில் இன்று கொண்டாடும் ஆயுத பூஜையை சக்தி பூஜையாக கொண்டாட வேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

பண்டைய காலத்தில் நமது வாழ்க்கைமுறையுடன் கலந்திருந்தது போரும்-ஆயுதமும்., உழவும்- உழவுக் கலன்களும். ஓவ்வொரு வீட்டிலும் போர் மறவன் இருந்தான், உழவனும் இருந்தான். துரதிருஷ்டவசமாக இன்று இந்த இருவரும் ஒவ்வொரு வீட்டிலும் இல்லை. ஆகவே கலன்களின் தேவையும் குறைந்துவிட்டது. தேவையுமே குறைந்துவிட்டது.

நவராத்திரி மற்றும் விஜயதசமி வழிபாடுகள்  பல நூற்றாண்டுகளாய் நாடு முழுதும் தசரா என்ற பெயரிலும் பல்வேறு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா மிகப்பெரும் மக்கள் விழாவாக அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடியதன் காரணம் நமது தேசத்தின் மீதும் தர்மத்தின் மீதும் ஏற்பட்ட தாக்குதல்களை முறியடிக்கவேண்டும் என்பதுதான்.

காலம் மாறியும் கோலம் மாறவில்லை என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.

எனவே இன்று நாம் நமது இல்லங்களில் கொண்டாடும் இந்த ஆயுத பூஜையை சக்திபூஜையாக.., அதாவது நமது வழிபாட்டு முறைக்கோ, வாழ்க்கை முறைக்கோ , தேசத்திற்கோ ஆபத்து ஏற்படுமெனில் துணிவாக எதிர்த்து நின்று முறியடிக்கக்கூடிய பலத்தை, மனத்திண்மையை வழங்கிட எல்லாம் வல்ல ஆதி பராசக்தி அன்னையை பிரார்திப்போம்

sar

சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

படிப்பிற்கும்., தொழிலுக்கும்., செல்வத்திற்கும் சொந்தமானவர்களை பூஜித்து அனைத்து வளங்களையும் பெற இந்துமுன்னணி வாழ்த்துகிறது.

saraswathi

மாநில பொதுக்குழு -விவரங்கள்

இந்துமுன்னணி பேரியக்கத்தினுடைய மாநில நிர்வாகக்குழு கடந்த 27,28 ( செப்டம்பர்) ம் தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. 2014 ம் ஆண்டிற்கான , மாநில அளவில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு  ஒன்றிய, நகர மற்றும் அதற்கு மேற்பட்ட பொறுப்புகளில் உள்ள பொறுப்பாளர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர் . அதன்படி மாநில நிர்வாகிகள் உட்பட 1509 பேர் இந்த 2 நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் கலந்துகொண்டு வழிப்படுத்தினார்கள்.

அமைப்பு குறித்த விஷயங்கள்., தமிழகத்தில் இந்து மதத்திற்கு எதிராக நடந்துவரும் விஷயங்கள் என பல விவாதிக்கப்பட்டன.

அடுத்துவரும் ஆண்டுகளில் செய்யவேண்டியவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

SAM_6408SAM_6419