23.04.2020
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது பாலிமர் செய்தி சேனல்.
எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் நடுநிலையோடும், நேர்மையாகவும் செய்திகளை பாலிமர் செய்தி தொலைக்காட்சி அளித்து வருகிறது.
இதன் விளைவாக தமிழ்நாட்டின் முதல் செய்தி தொலைக்காட்சியாக பாலிமர் உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரானா தொற்று மிக அதிக அளவில் பரவுவதற்கு தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக இருந்ததையும்,மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்ததையும், தேவையான காலகட்டத்தில் மிகவும் தேவையான விழிப்புணர்வு செய்தியை பாலிமர் தொலைக்காட்சி உடனுக்குடன் கொடுத்து வந்தது.
எதையும் மதரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து பழகிப்போன தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் எப்படியாவது பாலிமர் தொலைக்காட்சியை தொலைத்து கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நிர்வாகத்தை மிரட்ட துவங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் இன்னொசெண்ஸ் ஆப் முஸ்லீம் என்ற திரைப்படத்தையும், விஸ்வரூபம் போன்ற திரைப்படைத்தையும் எதிர்த்து எதுபோன்ற மிரட்டல்களை விடுத்தார்களோ அதே பாணியில் தற்போது அதன் தலைமை செய்தியாளர் வேல்ராஜ், மற்றும் அவர் சார்ந்த பாலிமர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
உண்மை செய்தியை வெளியிட்டதற்காக ஒரு செய்தி தொலைக்காட்சியை குறிவைத்து மதவெறி கும்பல் நடத்தும் இந்தத் தாக்குதலை எந்த அரசியல் கட்சியும் கண்டிக்க முன்வராதது அவர்களின் தரம் தாழ்ந்த ஓட்டு அரசியலை காட்டுகிறது.
எதற்கெடுத்தாலும் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் இடதுசாரி அமைப்பினர் கருத்து சுதந்திரத்திற்கு சவால் விடும் பாசிச சக்திகளை கண்டிக்க முன் வராதது ஏன்? என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.
குறிப்பிட்ட மதத்தினர் தவறு செய்தால் அதைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அரசியல் கட்சிகள் செயல்படுவது நியாயம்தானா?
ஊடகத் துறையைச் சார்ந்த சங்கங்கள் மூத்த ஊடகவியலாளர்கள் பாலிமர் தொலைக்காட்சியின் மீதான தாக்குதல்களை கண்டிக்காமல் இருந்தால் ஊடகத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக மக்கள் நினைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அனைத்து பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக சங்கங்கள் பாலிமர் செய்தி சேனல் மீது தொடுக்கப்பட்ட இருக்கின்ற இந்தத் தாக்குதலைக் கண்டிக்க முன்வர வேண்டும்.
மிரட்டல் விடுத்த அந்தக் கும்பலின் மீது அந்த செய்தி தொலைக்காட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து மதவெறிக் கும்பலை கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தமிழக அரசு பாலிமர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மிரட்டலுக்கு உள்ளான தலைமை செய்தியாளர் திரு. வேல்ராஜ் அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து முன்னணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணியில்
காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்